Thursday, May 28, 2026

ஜ்வாலை - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை


 

ஜ்வாலை  - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை

கல்கியில் 1960-களில் வெளிவந்தது 

அன்று பௌர்ணமியல்ல, அதற்கு முந்தின நாள். நிறைவுபெறாத நிலாவின் ஒளி அந்தி இருளை விரட்டிவிட்டு உலகத்தை வியாபித்துக் கொண்டிருந்தது. அதன் அமுத கிரணங்கள் பரந்த கடலின் மீது படியும்போது இன்பலாகிரியால் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கருநீலக் கடல் தன் உடலை அசைத்து நெளிந்தது. அந்த அசைவின் நெளிப்பில் எழுந்த அலைகள் கரையை நோக்கித் தவழ்ந்து வரும்போது கடலானது கண்ணைப் பறிக்கும் வெள்ளிக் குழம்பைக் கொப்புளித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமையை உண்டாக்கியது.

டாக்ஸியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுத் தன் தொழிலையும் மறந்து வேலாயுதம் எதிரே விரிந்து கிடந்த நீலக்கடலையும் அதன் கரையில் அமர்ந்து தங்கள் கவலைகளையும், உடல் களைப்பையும் தணித்துக் கொண்டிருந்த மனிதக் கூட்டத்தையும் நினைத்துப் பார்த்தான். ஆழ்கடலுக்கும் மனித உள்ளத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு நீண்ட காலமாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கவிஞர்களும், கதாசிரியர்களும் மனித நெஞ்சத்தை ஏன் கடலின் ஆழத்துடன் ஒப்பிடவேண்டும்? அதிருக்கட்டும்; இந்த அலைகள்தாம் ஏன் மாலை நேரத்தில் அவற்றின் கரையில் ஜனங்கள் வந்து அமரும்போது குதித்துக் குதித்துக் கும்மாளம் போட வேண்டும்? எதற்காக அவை இப்படி 'ஹோ'வென்று கோஷமிடுகின்றன? தன் நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எந்த ரகசியத்தைக் கூற இப்படித் துடிக்கின்றன? ஆம்; அது வெறும் ரகசியமல்ல, ரகசியத்தின் சுமை! அந்தப் பெரும் சுமையைத் தாங்கமுடியாமல் தான் அவை இப்படி வேதனையுடன் தவிக்கின்றன. எத்தனை பேர்கள் எத்தனை வருஷங்களாக இந்தக் கரையில் நின்றுகொண்டு தங்கள் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும், கண்ணீரையும் வெளியிட்டிருப்பார்கள்! மைந்தனைப் பறிகொடுத்த தந்தையின் வேதனையையும்; வீட்டில் நாலு பேர் முன்னால் பேச வெட்கப்பட்டுக்கொண்டு இங்கு வந்து தங்கள் உள்ளக் காதலையும், ஆசையையும் அன்பையும் போட்டி போட்டுக் கொண்டு கிடைத்த அவகாசத்தில் பரிமாறிக் கொள்ளும் இளம் தம்பதிகளின் சுவையான கட்டுரைகளையும் இக்கடல் கேட்டிருக்கும். வாழ்க்கையில் உணர்ச்சி வசப்பட்டு ஏமாற்றமடைந்த உள்ளங்களின் ஆற்றாமை, வேலை கிடைக்காமல் அலைபவர்களின் குமுறல்... இது மட்டுமா? மானிடப் பிறவியின் சில பயங்கரச் செயல்களைக்கூட அது பார்த்திருக்கும்!

"டா...க்...ஸி!"

வேலாயுதம் திரும்பிப் பார்த்தான். அவன் நிறுத்தியிருந்த டாக்ஸியின் அருகே இருவர் நின்று கொண்டிருப்பதையும் தன்னை அழைத்தது அந்த இருவரில் ஒரு பெண் என்பதையும் தெரிந்து கொண்டான். வேலு அருகில் வந்ததும் கதவைத் திறந்து கொண்டு அந்த இளைஞனும் யுவதியும் பின் ஸீட்டில் ஒருவர்மேல் ஒருவர் விழாத குறையாக ஏறி அமர்ந்து கொண்டனர். அப்போது டாக்ஸி ஒரு முறை பலமாகக் குலுங்கியது. மீட்டரைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்புவதற்குள் உள்ளே அமர்ந்திருப்பவர்களை ஒரு முறை பலமாகக் குலுங்கியது. மீட்டரைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்புவதற் குள் உள்ளே அமர்ந்திருப்பவர்களை ஒரு ‘நோட்டம்’ விட்டான் வேலு. அவர்கள் அவனுக்குப் பரிச்சயமானவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு அவனைத் தெரியாது. தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவு இப்படித்தானே இருக்கிறது? ‘‘கிதர் ஜானேகா, சாஹப், மாதுங்கா?’’ என்று அவன் கேட்டதும், ‘‘ஆமாம்!’’ என்ற பதில் சற்று ஆச்சரியம் கலந்து வந்தது. அத்துடன், ‘‘சீக்கிரம்! வேகமாகவிடு!’’ என்று கூறிய அந்த யுவதியின் பதற்றக் குரலும் கலந்துகொண்டது. கொஞ்ச நேரத்துக்கு அவர்கள் பெரிதாகவிடும் பெருமூச்சுமட்டுமே கேட்டது. பிறகு அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அழகு கொழிக்கும் அந்த வனிைதயின் அன்பு ஸ்பரிசம் அந்த ஆடவன்மீது பட்டது. தலைக்குமேல் மாட்டியிருந்த நீண்ட சதுரக் கண்ணாடியில் இக்காட்சியைக் கண்ட போது அடிக்கடி அந்த நாரீமணி தன் செம்பவழ உதட்டைத் திறந்து, ‘‘எனக்கென்னமோ பயமாக இருக்கிறது!’’ என்று பீதி கலந்த குரலில் திருப்பித் திருப்பி மிழற்றுவதும் அதற்கு அந்த வாலிபன், ‘‘இதற்கெல்லாம் கவலைப்பட்டால் எப்படி? வீணாகப் பயந்து சாகாதே, விஜயா!” என்ற கீறல் விழுந்த இசைத்தட்டாக மாறிப் பதில் அளிப்பதும் வேலுவுக்குத் திகைப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. ‘எதைக் கண்டு இவர்கள் பயப்பட வேண்டும்? எதற்காக இவர்கள் கவலைப்பட வேண்டும்?’ என்று அவனுக்கு விளங்கவில்லை. என்றாலும் ஒரு மாதிரி விளங்கித்தான் செய்தது. ஏனென்றால் அவனுக்கு அவர்களைத் தெரியும்.

வேலு தன் டாக்ஸியில் எத்தனையோ தடவைகள் இதே நேரத்தில் இங்கிருந்து அவர்களை மாதுங்காவுக்கு ஏற்றிச்சென்றிருக்கிறான். முதன் முதலில் இவ்விருவரையும் சந்தித்தபோது வசீகரம் பொருந்திய இந்த ஜோடி அவன் மனத்தில் ஒரு மானஸீகத் திருப்தியை ஏற்படுத்தியது. “இப்பெண்ணுக்கு இந்த ஆசாமிதான் கணவனாக வாய்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரம்மா மிகுந்த பிரயாசையுடன் செய்த இந்த அற்புத சிருஷ்டி வீண்!” என்று எண்ணினான். என்றுமே உள்ளத்தில் தோன்றிய முதல் அபிப்பிராயம் வைரத்தை விட உறுதி வாய்ந்தது அல்லவா? சிருஷ்டி கர்த்தாவும், கால தேவனும் கூர்ந்து நோக்கி ஒவ்வொரு அங்கத்தையும் ஆராய்ந்தறிந்து அமைத்து மலரின் மென்மையையும் பால் நிலவின் தண்மையையும் கொண்ட கலவை பூசி, வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் இந்தச் சுந்தரியைப் பூலோகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்! அவளைப் பார்க்கும்போதெல்லாம் சிவந்த எல்லைக்குள் தாழம்பூ நிறத்தில் ஒளிரும் விளக்கின் சுடர்தான் வேலுவின் கண்முன் தோன்றும். அந்த அழகில் அச்சம் தரும் ஒரு தீவிர சக்தி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலின் வெட்டு எவ்வளவுதான் ரம்மியமாக இருந்தாலும், கண்ணிமைக்காமல் பார்க்க வேண்டும் என்ற துணிவு மட்டும் நமக்கு வருவதில்லையல்லவா? அதனால் அந்தப் பெண்ணை நோக்கும்போதெல்லாம், எண்ணும்போதெல்லாம் தூய்மையான, பயமும் பவ்யமும் கலந்த ஒரு உணர்ச்சி வேலுவின் மனத்தில் உண்டாவது வழக்கம். பார்த்தவுடன் இப்படிப்பட்ட புனிதமான உணர்ச்சியைத் தூண்டி விட்ட ஒரே பெண் நாளதுவரை இவள்தான். அப்படியானால் அவள் எவ்வளவு நல்லவளாக யிருக்கவேண்டும்? அவளது நெஞ்சில் கிளர்ந்த காதல் எத்தகைய சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? அவள் வாயிலிருந்து பிறக்கும் வாக்கு இனிமையாகத்தானே இருக்க முடியும்? கொள்ளை அழகும், குன்றுபோல் குணமும் உடைய இந்தப் பெண்ணின் பரிபூரண அன்பைப்பெற்றது அந்த இளைஞனின் பூர்வ ஜன்மம் என்று ஒன்று உண்டானால் அதில் செய்த தவத்தின் பயன கவே இருக்க வேண்டும்!

தாதர் சர்க்கிளில் வளைந்து திரும்பி நீண்டு கிடந்த வின்ஸன்ட் ரோடில் வழுக்கி விழுந்துவிடும் வேகத்தில் டாக்ஸி ஓடியது. டாக்ஸிக்குள் நிலவியிருந்த அமைதி கசப்பு மருந்தைக் குடிப்பது போலிருந்தது. அவ்விருவரும் பேசவேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் காதல் நெஞ்சம் இந்த உலகத்தில் புத்தம் புதிய கற்பனைகள் வற்றாத ஊற்றுப்போல் உதிக்கும் இடம். அதிக நேர மௌனத்துக்கு அங்கு இடம் கிடையாது. இது அனுபவ வாக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதோ இவர்கள் திரும்பவும் பேச ஆரம்பித்திருப்பார்களா?

“விஜயா! இதோ பார், நான் இத்தனை நேரம் உன்னிடம் கூறியதெல்லாம் நினைவிருக்கட்டும். இதைப்பற்றி நாம் தினமும் பேசியிருக்கிறோம். அதனால் புதிதாக யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. பயந்து பயந்து நாம் சந்தித்துக் கொள்வதில் சந்தோஷம் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? இந்த வேதனையிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுபடுவதற்குள்ள திட்டத்தைத்தான்.........!”

“உஸ்......அதற்குமேல் நீங்கள் பேச வேண்டாம். நான்தான் ‘சரி’யென்று அப்பொழுதே சொல்லிவிட்டேனே. என்றாலும் ஏனோ என் உள்ளம் நடுங்குகிறது."

"மறுபடியும் சொல்லுகிறேன், விஜி, இப்படி நடுங்கிச் சாவதில் அர்த்தமில்லை. நீ செய்யும் காரியத்தினால் துரோகம் இழைப்பதாக அந்தராத்மா இடித்துக் காட்டினால் நீ தங்கி விடலாம், ஆனால்... அப்படித் தங்கிவிட்டால்... தங்கி விட்டால் என் கதி? விஜி, நீ தினமும் பிரிந்து செல்லும்போது என் மனம் எத்தகைய சித்திரவதைக்கு ஆளாகிறது, தெரியுமா? அந்த அவஸ்தையை நிரந்தரமாக்கி விடாதே, விஜயா!" கம்பீரமாகத் தோன்றிய அந்த ஆணின் குரலிலும் ஒரு இளக்கம். ஐயோ! காதல் இன்பத்தைக் கொடுக்கும் உணர்ச்சியா? இல்லை, சுத்தப் பொய். உலகத்தில் ஆளை உருக்கிவிடும் துன்பம் ஒன்று உண்டானால் அது காதல்தான்!

வார்த்தைகள் மெதுவாக அடங்கியதும் விசும்பலின் ஒலி இலேசாக எழும்பியது. விஜயா என்று அழைக்கப்பட்ட அந்தச் சுந்தரி அவன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அந்த யுவனின் கரம் அவளது கூந்தலை வருடிக் கொண்டிருந்தது. "அழாதே, விஜி!" என்று உடைந்த குரலில் அவன் கூறியது கிணற்றுக்குள்ளிருந்து பேசுவதுபோல் இருந்தது.

வேலுவின் மூளை அவர்களது பேச்சைக் கேட்டுக் குழம்பியது. 'இதென்ன இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டு அழுகிறார்கள்? இவர்களது பேச்சில் அடிபட்ட திட்டம், துரோகம் என்ற சொற்களுக்குள் புதைந்திருக்கும் ரகசியம்தான் என்ன? ஒருவேளை வழக்கம்போல் எல்லோரும் வரும்முடிவுக்கு அதாவது தங்களுக்கு எதிராகக் கிளம்பும் சக்தியின் கரங்களுக்கு எட்டாதபடி ஓடிவிடும் முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்களோ? அப்படி இவர்கள் திட்டமிட்டால் அது எப்படித் துரோகமாகும்? இவர்களது வாழ்வுக்குக் குறுக்குச் சுவர் எழுப்புபவர்கள் அல்லவா உண்மை துரோகிகள்?'

"இங்கே நிறுத்து டிரைவர்!"

அவர்களது மன நிலையைப் புரிந்து கொண்டவன்போல் வேலு பக்கத்திலிருந்த திருப்பத்தின் இருள் படிந்த பகுதியில் டாக்ஸியை நிறுத்தினான். இருவரும் கீழே இறங்கினார்கள். அந்த ஆடவன் அவளது வெண்மையான மென்மை பூசிய கரத்தைப் பற்றி, "நாளை ஏழு மணி, மறந்து விடாதே. நேராக ஸ்டேஷனுக்கு வந்துவிடு. இதே டாக்ஸி உனக்காக இங்கு ஆறரை மணியிலிருந்து காத்துக் கொண்டிருக்கும். உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். தைரியத்தை நழுவ விட்டுவிடாதே!" என்றான். அந்தச் சுந்தரி கருவண்டு போலிருந்த தன் கண்கள் அலைபாயத் தலையை அழகாக அசைத்தாள். பிறகு அவன் வேலுவிடம், "டிரைவர்! நாளைக்கு இதே இடத்தில் மாலை ஆறரை மணிக்கு இருக்க வேண்டும். இவளைக் காரில் ஏற்றிக்கொண்டு 'சென்டிர'லுக்கு 'டெக்கான் குயின்' புறப்படுவதற்கு அரைமணி முன்னதாக வந்துவிடு. முதல் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறையில் நான் இருப்பேன். இந்தா இருபது ரூபாய். நாளை சரியாக ஆறரை மணிக்கு வந்துவிடு?" என்று சொல்லியவாறே நோட்டுக்களை வேலுவின் கையில் திணித்தான். வேலு வாயெல்லாம் பல்லாக, மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி வழிய, “இந்த வேலு கிட்டே ஒரு விசயத்தை ஒப்புச்சா அதை முடிக்கிறவரைக்கும் கண் மூட மாட்டான்!” என்று கூறினான் அவர்கள் மொழியிலேயே.

“அது மட்டுமல்ல, அப்பனே! இது பரம ரகசியமாக இருக்க வேண்டும்!”

“ஆ, அதென்ன அப்படிச் சொல்லிப் பிட்டிங்க. இந்த நெஞ்சுக்குள்ளே ஒரு விசயத்தைப் போட்டுட்டேன்னா அப்புறம் கடவுளே வந்தாலும் அறிஞ்சுக்க முடியாதுங்க. நீங்க கிஞ்சித்தும் பதறாதீங்க!”

கடவுள் என்ற சொல்லைக் கேட்டதும் அந்த யுவதி திடுக்கிட்டாற்போல நிமிர்ந்து பார்த்தாள். அந்த ஒரே வினாடிக்குள் அவள் முகத்தில் விவரிக்க முடியாத கலவரத்தின் நிழல் படிந்து மறைந்தது. அவள் சட்டென்று, “ரொம்ப நேரமாகி விட்டது, நான் வருகிறேன்!” என்று கூறிவிட்டு வீதியில் இறங்கி விடு விடுவென்று நடக்க ஆரம்பித்தாள். அடுத்த முனையில் திரும்பும்போது அவள் முகத்தைத் திருப்பி அந்த இளைஞனை ஒரு தடவை பார்த்தாள். அவன் கரத்தை ஆட்டினான். அடுத்த வினாடி அவள் உருவம் மறைந்து விட்டது.

மறுநாள்.

Here is the clear transcription of the Tamil text from the image JwaalaiPage4-Bottom.jpg:

JwaalaiPage4-Bottom.jpg Transcription

மறுநாள்.

‘எம்பயர்’ தியேட்டரில் ஆறரை மணி காட்சிக்கு ‘க்யூ’ நிற்கும்போது, வேலுவின் டாக்ஸி குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்றுவிட்டது. டாக்ஸியை ஒட்டியிருந்த காம்பவுண்டு சுவரின் உட்புறத்தில் வளர்ந்து வீதிப்பக்கம் கவிழ்ந்திருந்த மனோரஞ்சித மலரின் கொடி பரப்பிய சுகந்தம் ‘கம்’மென்று வீசியது. முன்பனிக்கால மாதலால் இயற்கை தன் நீல நிறத் திரையை மெல்ல மெல்ல இழுத்து உலகத்தை மறைத்துக்கொண்டிருந்தது. தெருவின் முனையில் பதிந்த வேலுவின் கண்கள் விஜயாவின் உருவத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் அவள் வந்து விடுவாள்! சில மணி நேரத்தில் அவள் அந்தக் களை பொருந்திய வாலிபனுடன் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டுருப்பாள். அவர்களது வாழ்க்கைப் பகுதியின் இரண்டாவது அத்தியாயம் இன்பமான பிரயாணத்துடன் ஆரம்பமாகும். பிறகு ‘என்ஜின் கூட்’டின் பிரகாசமான வெளிச்சத்தில் கண்ணுக் கெட்டியதூரம் வரை விரிந்து கிடக்கும் ஒளி நிறைந்த பாதையைப்போல் அவர்களது வாழ்க்கையும்...!

வேலாயுதம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஏழு அடிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன. அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு மூண்டது. அவள் ஏன் இன்னும் வரவில்லை?

தெருவில் போவோரும் வருவோமாக இருந்தார்கள். முனையில் திரும்பிய எத்தனையோ ஸ்திரீகள் அவனை நோக்கி வந்து அவனையும் தாண்டிச் சென்றார்கள். ஆனால் கொழுந்து விட்டெரியும் அழகுHere is the verbatim transcription of the Tamil text from the image JwaalaiPage5-Top.jpg:

டைய அந்த நங்கையை மட்டும் காண வில்லை! கடிகாரத்தின் நீண்டமுள் வெறி பிடித்ததுபோல் சுற்றுவதாகத் தோன்றி யது. மணி ஏழைக் கடந்து ஐந்து நிமிடங்கள்......பத்து......பதினைந்து...... வேலுவின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. ஒரு வேளை...ஒரு வேளை அவள் வரவே மாட்டாளோ? தன் மனத்தை மாற்றிக்கொண்டிருப்பாளோ? அல்லது விஷயம் வெளிப்பட்டுக் குடும்பத் தினர் அவளை ஓர் அறையில் அடைத்து வைத்து, “பெண்ணே! இப்பொழுது உன்னுடைய காதல் என்ன செய்கிறது, பார்ப்போம்!” என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்களோ?

வேலு நம்பிக்கை இழக்கும் தறுவாயில் மறுமுனையில் விஜயாவின் உருவம் தோன்றி வேகமாக அவனை நோக்கி முன் னேறியது. தன் முகத்தை முக்காடிட்டுக் கொண்டு பதற்றத்துடன் வந்தவள் டாக்ஸியின் கதவைத் திறந்து உள்ளே கோழிக்குஞ்சைப்போல் பதுங்கிக்கொண் டாள். வேலு வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்து ‘மெயின்’ ரோட்டில் விட ஆரம்பித்தான்.

“ஏம்மா, இத்தனை நேரம்? உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்ணு பூத்துப் போச்சுங்க. ஏழு நாற்பத்தைந் துக்கு ‘டெக்கான் குயீன்’ புறப்பட்டு விடுமே. இன்னும் இருபது நிமிசத்திலே சேர்ந்தாகணுமே!” என்றதும் ‘ஆக்ஸி லேட்டரை’ அழுத்தினான். வண்டி வேகத்தால் உந்தப்பட்டு விரைந்தது.

“இன்னும் வேகமாக விடு, அப்பா!”

மைல் முள் பத்து, இருபது என்று ஏறிக் கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் வேலுவின் கைகள் வேறு ஏதோ ஒரு சக்திதான் இயக்கியிருக்கவேண்டும். இப்பொழுது வண்டி நாற்பது மைல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஐ...ய்யோ இதென்ன?... அடுத்த திருப் பத்திலிருந்து மெயின் ரோட்டில் கலக்க வரும் இந்த ராட்சச லாரி......

வேலு 'பிரேக்' போட்டு வண்டியை நிதானப்படுத்துவதற்குள் குறுக்கே பாய்ந்த மலை போன்ற லாரியின் மீது டாக்ஸி பயங்கர சத்தத்துடன் மோதி யது. "வீல்!" என்ற ஒரு அலறலின் எதிரொலி மட்டும் எங்கும் பரவியது.

'ஜஹாங்கீர்' ஆஸ்பத்திரியின் இரண் டாவது மாடியில் அறுபத்தொன்றாவது வார்டில் பிரவேசித்த நர்ஸ் ஒருகணம் ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்து நின்றாள். கட்டிலில் பிரக்ஞையிழந்து உடம்பு முழு வதும் கட்டுக்களுடன் கிடந்த ஆசாமி யின் முகம் அசைந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் மெல்லத் திறந்துகொள் வதைக் கவனித்த நர்ஸ் இளநகை செய் தாள். திடீரென்று அவன் கண்களில் எதையோ ஞாபகப் படுத்திக் கொண்ட ஒரு உணர்ச்சி பிரதிபலித்தது. சடக் கென்று கட்டிலில் எழுந்து உட்கார முயன்ற அவனை நர்ஸ் பாய்ந்து வந்து- பிடித்துக் கொண்டு "இப்பொழுது நீ எழுந்திருக்கக் கூடாது" என்று கூறினாள். நர்ஸ் ஒரு கணம் அவனை வெறித்துப் பார்த்தாள். பிறகு, "உனக்கு உடம்பு பூர்ணமாகக் குணமாக வில்லைபோலிருக்- கிறதே. இப்பொழுது நீ பேசவே கூடாது!" என்றதும் சுவரில் தொங்கிய குறிப்பேட்டில் எதையோ கிறுக்கிவிட்டுக் கவுன் சரசரக்க வெளியேறினாள்.

மாலையில் டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தவுடன் வேலு மரியாதைக்காக எழுந்து உட்கார முயற்சி செய்தான். காலையிலிருந்ததை விட இப்பொழுது அவன் முகம் தெளிவடைந்திருந்தது; சற்றுத் தெம்பும் ஊறியிருந்தது.

"உடல்நிலை எப்படி இருக்கிறது, வேலாயுதம்?" என்று கேட்டுக் கொண்டே டாக்டர் கட்டுக்களையும் நாடி- யையும் பரிசோதித்தார்.

"உடம்பு தேவலைங்க. ஆனால் மனசு தான் சரியில்லை. என்னென்னவோ எண்- ணங்கள் தோன்றி மனசு ரொம்பவும் கஷ்டப்படுதுங்க" என்றான் வேலு வெகுளியாக.

டாக்டர் மெல்லச் சிரித்தார். சிரிக்கும் போது முகத்தில் விழுந்த சுருக்கம் அவ- ருக்குக் குறைந்தது நாற்பது வயதாவது இருக்கும் என்று மதிப்பிடத் தோன்றி- யது. வேலுவுக்கு அவர் கூறிய பதில் அவருடைய ஆழ்ந்த அனுபவத்தைப் பறைசாற்றியது. "எனக்குக்கூடத்தான் மனம் சரியாக இல்லை. நம்முடைய கடமையில் நாம் முன்னேறும்போது கவலைகள் மனத்தைவிட்டுத் தானாகவே அகன்றுவிடுகின்றன. இல்லையா, வேலாயுதம்? நான் சொல்வது சரிதானே?"

"ஆமாங்க.......உம்....... ஒரே ஒரு விஷ- யம் உங்ககிட்டே கேட்கணும், என்னுடைய டாக்ஸியில் பிரயாணம் செய்த அம்மாள்......?"

"விபத்து நடந்த இடத்திலேயே....."

"என்ன? இறந்துவிட்டார்களா? ஐயையோ, நான் கட்டின கோட்டையெல்லாவற்றையும் இடிச்சுத் தள்ளிபிட்டேனே பாவி!"

"அந்த அம்மாளை உனக்கு எப்படித் தெரியும், வேலு?"

"நல்லாக் கேட்டீங்க, டாக்டர்! அந்த அம்மாளைப் பார்த்துப் பேசக் கொடுத்து வைச்சிருக்கணுமே, டாக்டர். அந்தச் சிரிச்ச முகமும், கொள்ளை கொள்ளும் அழகும்... அது ஒரு தெய்வப் பிறவிங்க. நான் முன்னேயே நினைச்சேன். இத்தனை அழகு ஜ்வாலை விட்டெரியுதே, மனுசனை எரிச்சுடுமேன்னு. ஆனால் அது தன்னையே எரிச்சுக்கிடுத்து. ஒருவேளை அன்னிக்கு அவங்க ரயில்லே போயிருந்தாங்கன்னா ரயிலே கீழே விழுந்து அந்த ஆளு பொசுங்கிப் போனாலும் போயிருப்பாங்க. அது ஆளை எரிக்கும் அழகு!"

"யாரப்பா அந்த மற்றொரு ஆசாமி?" டாக்டரின் குரலில் ஒலித்த நடுக்கத்தை வேலு கவனிக்கவில்லை. அதனால் அவன் எத்தகைய பாதகம் செய்துவிட்டான்?

"அது யாருன்னு தெரியாதுங்க. தினமும் அவங்க சந்திச்சுப்பாங்க. டாக்ஸிலே திரும்பி வருவாங்க. 'ஆக்ஸிடெண்ட்' நடந்த முந்தின நாள் அவங்க இரண்டுபேரும் 'இனிமே பயந்து பயந்து சந்திக்க முடியாது, ஓடிடுவோம்'னு பேசிக்கிட்டாங்க. டாக்டர், உங்க உடம்புக்கு என்ன?... ஏன் இப்படி உங்க முகம் வெளுத்துப் போச்சு... நர்ஸ், நர்ஸ்!"

"ஊஹூம்... நர்ஸைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. வேலு! உன்னை அறியாமல் நீ எனக்குக் கொடுமை செய்து விட்டாய். நீ கூறிய விஷயங்கள் இதுவரையில் எனக்குத் தெரியாது. தெரியாமலேயே இருந்திருக்கக் கூடாதா என்றுகூட இப்பொழுது தோன்றுகிறது!" இப்படிச் சொல்லிவிட்டு டாக்டர் சட்டென்று எழுந்து வெளியே சென்றார்.

டாக்டர் வெளியில் சென்றதும் நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள்.

"என்னைக் கூப்பிட்டது நீதானே!"

"ஆமாம்!"

"என்ன வேண்டும்?"

"ஒரே ஒரு விஷயம். என்னுடைய டாக்ஸியில் பிரயாணம் செய்த அந்த அம்மாளை டாக்டருக்குத் தெரியுமா?"

"தெரியும், மிக நன்றாகத் தெரியும்!"

"அவள் யார்?"

"அவருடைய இரண்டாவது மனைவி!"

No comments: