பரிவின் ரகசியம் - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை
---------------------------------------------------------------------------------------
ஜூன் 12, 1960 கல்கியில் வெளிவந்தது
“ஏ லேய் பலவேசம்! அம்மாவுக்கு இரண்டு படி உளுந்து கட்டிக் கொடு.”
“காலையிலே முதல் பஸ்ஸிலே தான் முட்டைக்கோஸ் வந்திறங்கி யிருக்கிறது. இரண்டு ராத்தல் போடச் சொல்லட்டுமா?..... ஏஞ்ய்யா வெண்டைக்காயை ஒடிச்சு ஒடிச்சுப் போடறே?.... பலவேசம், அங்கே கவனி!”
“டேய் வேலு, ஐந்நூத்தி ஒன்று பார் கட்டு சாருக்கு ஒன்று எடுத்துக் கொடு.”
சாவி கொடுத்த இயந்திரம் போல் ‘மீனாட்சி ஸ்டோர்ஸ்’ சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியின் அருகில் தன் பூத சரீரத்தை இருத்திக் கொண்டு அதிகாரக் குரலை அடிக்கடி வெளிப்படுத்தி வியாபாரத் தைக் கவனித்துக் கொண்டிருந்த மேயண்ணா ராவண்ணா பிள்ளையின் கண்கள் கடையோரமாகக் கீழப்புறம் தயங்கிய வண்ணம் ஒதுங்கி நின்று கொண்டிருந்த காந்திமதியை அப்பொழுதுதான் பார்த்தன. சாதாரணமாகக் கையில் காசில்லாமல் கடன் சொல்லிச் சாமான் வாங்க வரும் ஆசாமிகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. கருணையை நம்பிக் கொண்டு அடிக்கடி வரும் காந்திமதியைக் கண்டால் அவர் “அட, தரித்திரமே!” என்று தான் முணுமுணுத்துக் கொள்வார்.
“உன்னைத்தான் கேட்கிறேன், காந்தம்! கையிலே மருந்துப்புட்டி வச்சிருக்கீயே. அம்மாவுக்கு இன்னும் உடம்பு குண
“ஆமாங்க. இதயக் கோளாறு. ரொம்ப நாளு ஓடாதுன்னு டாக்டரய்யா சொல்லிப்புட்டாரு...!”
“அவரு கிழிச்சாரு. எல்லாத்துக்கும் மேலே விதின்னு ஒன்று இருக்கில்லே!”
“வீட்டு நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அம்மா படுத்தப்புறம் வேலைக்குப் போறதை நிறுத்திவிட்டேன். எனக்கு ஒண்ணுமே ஓடலீங்க!”
“கவலைப்படாதேயம்மா, பழனியாண் டவன் கவனிச்சுப்பான். எதாவது வேணும்னா எங்கிட்டே கூசாமக் கேளு. இப்ப என்ன வேணும் சொல்லு!”
முன்பு தன்னைக் கண்டு ‘தரித்திரம்!’ என்று அலட்சியப்படுத்திய பிள்ளையின் மாறுதலைக் கண்டு, அவர் காட்டிய பரிவை எண்ணி காந்திமதியின் மனம் அப்படியே உருகிவிட்டது. “என்ன வேணும்” என்று பிள்ளைவாள் கேட்டதும் சற்றும் தயங்காமல், “அம்மாவுக்குக் கஞ்சி போடப் ‘பார்லி’ கொடுங்க!” என்று சொல்லவும் தூண்டி விட்டது.
“ஏ லேய் பலவேசம், அரைப்படி ‘பார்லி’ கட்டிக்கொடு, காந்திமதிக்கு!”
பலவேசம் ஸ்தம்பித்துத்தான் நின்றான் ஒரு கணம். அரியநாயகிபுரத்திலுள்ள கஞ்சப்பிரபுக்களில் முதன்மையில் நிற்கும் மேயண்ணா ராவண்ணாவா மற்றவர்களிடம்
காந்திமதி போய் விட்டாள்.
பிள்ளை அவள் போவதை ஒருதரம் அர்த்தமின்றியோ அல்லது அர்த்தத்துடனோ பார்த்தார்.
மேயன்னா ராவன்னா பிள்ளை யென்றால் அரிய நாயகிபுரத்தில் அது ஒருவரைத்தான் குறிக்கும்.
அரியநாயகபுரத்து வாசிகள் எவ்வளவோ அதிசயங்களைக் கண்டிருக்கிறார்கள் - ஒன்றைத் தவிர
பகல் பன்னிரண்டு மணிக்குக் கடையை மூடிவிட்டு ராமையா பிள்ளை வீட்டுக்குச் சென்றதும் மீனாட்சியம்மை, “ஆமாம், பல வேசம் சொன்னது நெசம் தானா? அந்தக் காந்திமதிக்குப் ‘பார்லி’ இனாமாகவே கொடுத்தீங்களாமே...... !” என்று ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குப் பொரிந்து தள்ளினாள். விசுவாமித்திரரின் அம்புகளை விழுங்கிய வசிஷ்டரின் பிரும்ம தண்டமாக மாறியிருந்தார் ராவன்னா. சாப்பிட உட்காரும்போது ஒருவன் ஓடோடியும் வந்தான். “காந்திமதி! உங்களைக் கையோடு கூட்டியாரச் சொன் னாங்க. அவங்க அம்மாவுக்கு மூச்சுப் பேச்சு இல்லையாம்!” என்றான்
அப்படியே துண்டை உதறிப் போட் டுக்கொண்டு எழுந்து விட்டார் பிள்ளை. “என்னங்க இது? யாருக்கோ மூச்சு நின்னு போச்சுன்னா நீங்க எதுக்கு,...?” மீனாட்சியம்மை சொல்லி முடிப்பதற்குள் அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சுட் டெரிக்கும் தார் ரோட்டில் செருப்பில் லாத பாதங்களுடன் நடக்க ஆரம்பித்து விட்டார்
சிறு கூட்டம் கூடியிருந்தது வீட்டுக்கு முன்னால். காந்திமதியின் அழுகுரல் கேட்டது
“ஐயோ! பாளையங்கோட்டைக்கு எப் படி அம்மாவைக் கூட்டிக்கிட்டுப் போய் வருவேன்? டாக்டரய்யா, வேறே வழியே யில்லையா?” என்று காந்திமதி விம்மிக் கொண்டே வினவினாள்
“ஏன் இல்லை, காந்தம்? நீ முதலிலே அழுகையை நிறுத்து. நான் எல்லா ஏற்பாடுகளும் பண்ணறேன்!” என்ற அபயக்குரல் கேட்டுத் திரும்பினாள் காந்தி மதி. அங்கு..
'ஏதாவது உதவி வேணும்னா எங் கிட்டே கூச்சாமக் கேளு' என்று காலை யில் சொன்ன வார்த்தைகளை உண்மை யாக்கிக் கொண்டு ராமையா பிள்ளை நின்று கொண்டிருந்தார். முகத்தில் அதே பரிவு, அதே வாத்சல்யம்!
“டேய், கோட்டிலிங்கம்! பெரிய பண்ணை அருணாசலம் பிள்ளையிடம் போயி என் பேரைச் சொல்லி டவுனுக்குப் போக வேணும்னு காரை அனுப்பச் சொல்லு!” என்றார் ராமையா பிள்ளை.
கார் வந்தது. காந்திமதியின் தாயாரையும் காந்திமதியையும் ராமையாவையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.
மீனாட்சியம்மை கொதித்துக் கொண்டிருந்தாள். ‘போன வருசம் நான் படுத்த படுக்கையா யிருந்தப்போ டாக் டர் வீட்டுக்கு வந்தா 'பீஸ்' சாஸ்தி யாகும்னு என்னை ஆஸ்பத்திரிக்கு நடந்து போகச் சொன்னவருக்கு இப்பமட்டும்!..’ எளிலும் விளங்கும் காந்திமதியையும் தன் கணவனையும் இணைத்து என்ன வெல்லாமோ பைத்தியக்காரக் கற்பனை அவளது பெண் நெஞ்சத்தில் ஓடியது.
இரவு பன்னிரண்டு மணிக்குக் காரில் போனவர்கள் திரும்பினார்கள். காந்திமதியின் அலறல் ஊரையே கலங்க வைத்துவிட்டது. அவளுடைய தாயார் இறந்துவிட்டாள்! இனிமேல் இவ்வூரில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கிறார்கள் அவளுக்கு?
அழுது கொண்டிருந்த காந்திமதியின் தோள்மீது ஒரு கரம் விழுந்தது. “கவலைப்படாதே யம்மா! உனக்கு ஒரு குறைவும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றார் பிள்ளை.
இதற்கு மேலும் நல்லவர் என்பதை ராமையா இரண்டே மாதங்களில் நிரூ பித்துக் காட்டினார். காந்திமதியைத் தம் வீட்டு மருமகளாக்கிக் கொண்டார்.
“இந்தத் தரித்திரமா நம்ம வீட்டு மரு மகள்! உங்களுக்குப் புத்தி பொறண்டு தான்போச்சு!” என்றார் மீனாட்சியம்மை.
இது கல்யாணம் நடப்பதற்கு முன்பு நடந்தது.
“காந்திமதியைப் போல் அழகும் அடக்கமும் உள்ள பொண்ணு நமக்கு மருமகளாக வரக் கொடுத்து வைச்சிருக் கணுமேடி!” என்றார் ராவன்னா.
“அழகையும் அடக்கத்தையும் கொண்டு ஓடப்பிலே போடுங்க!”
“அட பைத்தியமே, அவ பத்தாயிரம் ரூபாய் சீதனம் கொண்டு வந்திருக்கா.”
“ஆங்!”
“பின்னே என்ன? பதினைஞ்சு வருசங் களுக்கு முன்னாலே கொலைக் கேசுக்குப் பயந்து மறைந்து போனானே காந்திமதி யின் அப்பன், உனக்கு ஞாபகமிருக்கா? மலேயாவுக்கு எப்படியோ போய்
“உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”
“நான் பட்டணம் போயிருந்தபோது வியாபார விஷயமா மலேயாவிலிருந்து வந்திருந்த ஆசாமியைப் பார்த்தேன். நம்ம ஊர் பேரைக் கேட்டதும் அவன் காந்திமதியின் அப்பனைப் பத்தி எல்லாம் சொன்னான். அடுத்த வீட்டுக்காரனாம். பத்தாயிரம் என்றால் சும்மாவா? லாபமில்லாமல் நஷ்டமுள்ள காரியத்தில் ஐயா இறங்குவாரா?” என்றார் பெருமையுடன் ராவன்னா.
“அட, என் ராசாவே!” என்று மகிழ்ந்து போய் விரல்களை நெற்றியில் வைத்து நெறித்துக் கொண்ட மீனாட்சியம்மை, “இருங்க, இருங்க, உள்ளே போயி மிளகாய்ப் பழமும் உப்பும் கொண்டு வரேன்!” என்று ஓடினாள்.
“எதுக்கடீ?”
“சுத்திப் போட. உங்க மூளைக்குத் திருஷ்டி வரக்கூடாது பாருங்க.”
“கொஞ்சமா எடுத்துக்கிட்டு வா!” என்றார் மேயன்னா ராவன்னா பிள்ளை
No comments:
Post a Comment