My Tamil novella ஒற்றாடல் has been published in the online magazine Solvanam.com.
Links and short intro are below:
ஒற்றாடல் - காட்டூர் கோட்டை - Part I
ஒற்றாடல் - நரசிம்மாஸ்திரம் - Part II
Links and short intro are below:
ஒற்றாடல் - காட்டூர் கோட்டை - Part I
ஒற்றாடல் - நரசிம்மாஸ்திரம் - Part II
காட்டூர்க் கோட்டை தரை மட்டமாகி இருந்தது..
பேச்சி மலையின் மேலிருந்து பார்க்கும் போது பெரும் புழுதிப் புகை கிளம்புவது தெரிந்தது..
என் உள்ளம் கொதித்தது. கைகள் நடுங்கின.
“போகலாமா? இப்பொழுது கிளம்பினால் பள்ளியூர் போகச் சரியாக இருக்கும்”, என்றான் வழுதி.
நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி, ஒரு பாறையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தான். வாயில் வெற்றிலை. நான் பார்க்கும்போது சத்தத்துடன் அதைத் துப்பினான்.
என் மனதில் எழுந்த கோபத்தை அடக்க முயன்று தோற்றேன்.
“என்னுடைய முதல் போர் இது”, என்றேன்.
அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.
“வாழ்த்துக்கள்” என்றான்.
“புறமுதுகிட்டு ஓடுகிறோம்”
அவன் எழுந்து குதிரையைத் தட்டிக் கொடுத்தான்.
“நல்ல வேளை குதிரை கிடைத்தது. இந்த மலைகளில் குதிரையில்லாமல் தப்பி ஓடுவது கஷ்டம்”, என்றான்.
“பல முறை ஓடிப் பழக்கம் போலிருக்கிறது?” என்றேன் நான்.
அவன் ஏறிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கை நீட்டினான்.
நான் தயங்குவதைப் பார்த்துச் சிரித்தான்.
“ஒற்றர்கள் புறமுதுகிட்டு ஓடலாம். சாத்திரத்திலே சொல்லியிருக்கிறார்கள்”, என்றான்.
குதிரை தட்டுத் தடுமாறி காட்டுக்குள் நுழைந்தது.