Tuesday, September 13, 2022

குறுங் கதை - 5


 டிரெயினில் தாமபரத்தில் இருந்து போகும் போது தினமும் அவளைப்  பார்ப்பேன். கையில் "கல்கி" வைத்திருப்பாள். படித்துக் கொண்டே போவாள். அப்போதே சிறு சந்தேகம் எனக்கு.

"இருவர்" படம் வரும் முன்னால் "நறுமுகையே நறுமுகையே" பாடல் பிரபலமடைந்த நேரம். நான் பாட்டைக் கேட்டுப் பரவசமாகி டிரெயினில் நண்பர்களுடன் பேசி வந்தேன். அவள் சற்றுத் தள்ளி நின்றாள். காற்றில் அவள் முடி பறந்ததை ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.

"பாட்டு யாரு பாடினது?" என்றான் நண்பன் ஒருவன்.

"பாம்பே ஜெயஸ்ரீ," என்றவாறு அவளை பார்த்தேன். நான் நினைத்தது போலவே  சட்டென்று தலை நிமிர்த்தி என்னைப்  பார்த்தாள். அது தான் முதல் முறை என்னைப்  பார்க்கிறாள் என்று நினைக்கிறேன். கர்நாடகப் பாடகியான  ஜெயஸ்ரீ பெயர் அவளுக்கு அறிமுகமானது தெளிவாகத் தெரிந்தது.

"யாரவ ஜெயஸ்ரீ?" என்றான் நண்பன்.

அவள் முகத்தில் சிறு புன்னகை.

சில நாட்களில் ஆவணி அவிட்டத்தன்று கருப்பு ஹோமக் கரியை எந்த நாளும் இல்லாமல் நன்கு நெற்றியில் பூசிக் கொண்டு சென்றேன். கவனித்துக் கொண்டாள்.

அவளுக்கு நான் யார் என்று confirm செய்தாகி விட்டது. ஆனால் எனக்கு இன்னும் சிறிது தயக்கம். ஒரு வேளை பரத நாட்டியம் வழியாக பாம்பே ஜெயஸ்ரீ பெயர் தெரிந்திருக்கலாம். பரத நாட்டியத்தில் நம்மாட்கள் தான் என்று சொல்லி விட முடியாது. பிள்ளைமார்களும், முதலியார்களும்  இருப்பார்கள். அதுவும் முதலியார் நல்ல கலர் வேறு.

அவளுக்கும் என் தேவை புரிந்திருக்க வேண்டும். அக்காலத்தில் காஞ்சி பெரியவர் கவர் படம் போட்ட கல்கி அடிக்கடி வரும். பழைய கல்கி இதழ் கையில் வைத்திருந்தாள். 

நான், என்ன படிக்கிறாள் என்று பின்பக்கத்தைப் பார்த்தேன். முக்கூர் நரசிம்மாச்சாரியாரின் பத்தி. எனக்குத் திருப்தியானது. 

மறுநாளே வீட்டில் பேசினேன்.

"சகோத்திரமா இருந்து வைக்கப் போறது," என்றாள் அம்மா.  

"இந்தக் காலத்துல அதுல்லாம் இருந்தா பரவாயில்லை," என்றார் அப்பா. 

அநியாயத்திற்கு வெட்கப்பட்ட அவளிடம் முகவரி வாங்கி, பெற்றோரிடம் போனில் பேசி, ஒரு நல்ல நாளில் அவள் வீட்டிற்கு நேரில் போய் விட்டோம்.

"பேசாமலேயே லவ்வா?" என்றார் அவள் அப்பா. 

கோத்திரம் என்னவென்று அம்மா முதலிலேயே கேட்டு விட்டாள். நிம்மதியுடன் சாப்பிட உட்கார்ந்தோம். 

"கேளு, நீ தான் போய் கேக்கணும்," என்று அவள் தங்கை பிடித்துத் தள்ளி விட, அவள் என் எதிரே வந்து, "தேயர்த்தம் வேணுமா?" என்றாள்.

நான் திடுக்கிட்டேன். அம்மா, "என்ன கேட்டாய்?" என்றாள்.

"தீர்த்தம் வேணுமான்னு கேக்கறா," என்றார் அவள் அப்பா.

சற்று நேர அதிர்ச்சிக்குப் பின், அம்மா, "நீங்க அய்யங்காரா?" என்றாள்.

அவர்களும் திகைத்தனர்.

"பையன் நெத்தியைப் பார்த்து நம்மடவான்னு  நினைச்சுட்டேன். எல்லாரும் ஒரே பகவானத் தான சேவிக்கறோம். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை."

அம்மா வெடுக்கென்று எழுந்து, "உங்களுக்கு எதுக்கு ஆட்சேபனை? நாங்கன்னா அதைச் சொல்லணும்!" என்று விட்டுக் கிளம்பினாள்.

Monday, August 15, 2022

பிரிட்டிஷ் போலீஸ் vs தமிழ்நாடு போலீஸ்


 காந்தி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் போலீஸ் தேசத்துரோகம் அது இது என்றெல்லாம் செக்ஷன் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

யோசித்துப் பார்த்தால் இதுவே இந்திய மக்கள் அவர்கள் பின் திரள வழியாகி விட்டது.
இன்றைய தமிழக போலீஸ் அக்காலத்தில் இருந்திருந்தால் காந்தி மேல் "அரசு குப்பைத் தொட்டியை ஓங்கி மிதித்தார்" என்று Public Property damage செக்ஷனில் கேஸ் போட்டிருப்பார்கள்.
உடனே இந்திய மக்களில் பாதிப் பேர் "குப்பைத் தொட்டியை என்ன இருந்தாலும் மிதித்திருக்கக் கூடாது," என்று சொல்லி வீட்டில் அமர்ந்த வண்ணம் காந்தியைக் கை கழுவி விட்டிருப்பார்கள்.
சுதந்திர போராட்டம் அப்படியே அமுங்கி இருக்கும்.
2015-ல் அதிமுக பொதுக்குழுவின் போது சென்னை நகரம் முழுவதும் பெரிய பெரிய வளைவுகளையும் கட்-அவுட்டுக்களையும் ஜெயலலிதா படத்துடன் அக்கட்சி வைத்தது.
பல பேருந்து நிறுத்தங்களை மூடி பேனர் வைத்திருந்தார்கள்.
இதைக் கண்டிக்கும் வண்ணம் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், அத்தர் மற்றும் சந்திரமோகன் ஆகிய மூவரும் மயிலாப்பூரில் பேனர்களை அகற்றினார்கள்.
பிரிட்டிஷார் போலீசாக இருந்தால் "மகாராணியை அவமதித்தார்" என்று நேரடியாக வழக்குப் பதிவு செய்து மக்கள் எல்லோரையும் கடுப்படையச் செய்திருப்பார்கள்.
தமிழக போலீஸ் சிம்பிளாக Public property damage என்று பிடித்து மேஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துப் போய், அவர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ரிமாண்ட் செய்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் அவர்களுக்குப் பிடிக்காததை எழுதினால் அது போலவே "முறைகேடாகப் பணம் வாங்கியிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது," என்று ரிமாண்டில் வைத்து விடுவார்கள்.
நாம் எல்லோரும் பணம் வாங்கினாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே அவர்கள் வென்று விடுவார்கள்.
இன்றைய காந்திகள் பலர் இப்படியே மறைந்து விட்டார்கள்.

Monday, August 08, 2022

Bird-watching and Dravidian movement


 In the past several months, I have tried developing hobbies which are more healthy - I have tried listening to Carnatic music; tried to take a shot at reading the GIta or old texts in the original.

The issue is that I could not enjoy any of these as much as I thought - because the entire Dravidian movement is in my head. When I watch Carnatic music, I remember their derogatory opinions of it; same for Gita or reading Sanskrit/Tamil.
All of it is hopelessly politicised in my mind.
Finally, I found something that is not politicised that way - bird watching. I have been interested in them for the past month or so, because I see them in the terrace during nice Chennai evenings.
So, I bought a pair of binoculars and have been spending some time for a couple of days trying to look at them.
You know how in ads to show cool working places, they show someone tossing a basketball in the middle of an office space? I can never do that, because my toss would land on someone's head, but right outside my window are trees, and there are birds there.
I thought I had finally found a hobby which is politics-free.
But, today is just the second day; and as I was trying to find a bird, I kept finding crows. I did not want to see crows, though. They are there all the time, and so I tried to dismiss them when a thought occured to me.
What would Dosai Mathimaran say about this?
நம்மைப் போல கீழ் சாதி எல்லாம் காக்கா, குருவின்னு பாப்போம். குழந்தைகளுக்கு காட்டி விளையாடுவோம்.
ஆனா மேல் சாதில இருக்கிறவன் பாருங்க - Jungle Babbler, Yellow-crested weaver அப்படின்னு தான் தேடி பார்ப்பான். பறவையிலயும் சாதி இருக்கு.
This has been running through my head for the past two hours, and I feel guilty for not looking at the crows.