Saturday, June 29, 2013

Tamil short story - உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்


My Tamil short story - உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும் was published in solvanam.com today. Please read and comment. Excerpt below:

தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம். காங்கிரஸின் முதல் கூட்டத்தில், எங்கள் முதல் நடவடிக்கையாக குண்டு போட வேண்டும் என்று ஆறுமுகம் விருப்பம் தெரிவித்தான். எங்கே, எப்படி என்ற கேள்விகள் ஆறுமுகத்தின் கோபத்தைக் கிளறி விட்டது. எங்களை மிதவாதிகள் என்று குற்றம் சாட்டினான். “வைஸ்ராய் மேல குண்டு போடலாம்,” என்றான். வைஸ்ராய் கல்லிடைக்குறிச்சி வரும் வரை பொறுக்க வைத்திக்கு இஷ்டமில்லை. “போலீஸ் ஸ்டேஷன் மேல குண்டு போடுவோம்,” என்றான். 

More at solvanam.com

1 comment:

Karthiga G said...

Nice story... Good narration and good humor...