My Tamil short story in solvanam.com, தந்திப் புரட்சி - ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்
Excerpt:
- See more at: http://solvanam.com/?p=33633#sthash.ahNmHCCA.dpuf
Excerpt:
ஆறு மாதங்கள் முன்பு தான் திருநெல்வேலி கலெக்டர் ஆஷை வாஞ்சி ஐயர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரராகவன் தூத்துக்குடியில் நடத்திய அதிரடிப் புலனாய்வில் பதினாலு பேர் மாட்டியிருந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் சூத்ரதாரியான நீலகண்ட ஐயர், ஒரு ரகசிய சதிக் கூட்டம் நடத்தியதாகக் கேள்வி. படிக்கப் படிக்க மர்மக் கதை போல இருந்த இந்த சதியைப் பற்றி நாலணா நாவல்கள் கூட வந்து விட்டன. கேஸ் முடியும் தருவாயில் இருந்தது. பதினாலு பேருக்கும் மொத்தமாகக் தூக்கு என்று என் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது பிரிட்டிஷ் விசுவாசி. ரிப்பன் கட்டிடத்தில் சில அறைகளுக்கு வயரிங் செய்ய காண்டிராக்ட் பிடித்து விட்டார்.
*
“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார்.
“சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.”
No comments:
Post a Comment