ஜனவரி 1964-ம் வருடம் கலைமகள் இதழில் என் தந்தை திரு.வெ.ராதாகிருஷ்ணன் எழுதி வெளியான சிறுகதை "துணை ஒன்று வேண்டும்".
பூத்தொட்டியில் கனகாம்பரம் ஆரஞ்சு நிறத்தில் பூத்துச் சொரிந்துகொண்டிருந்தது. இரண்டு தடவைகள் சாரதா ரோஜாப் பதியன் கொண்டு வைத்துப் பார்த்தாள். ஊஹூம், அது வளர மறுத்துவிட்டது. ஆனால் இரண்டொரு விதைகளைப் போட்டுவிட்டு வெகு அலட்சியத்துடன் இருந்தபோது இந்தக் கனகாம்பரம் அவளை நையாண்டி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் எவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டது! கனகாம்பரம் என்றால் அவளுக்கு விருப்பந்தான். கவர்ச்சி மட்டும் இருந்து, மணம் மருந்துக்குக் கூட இல்லாத அந்த மலரினிடம் அவளுக்கு எப்படிப் பிரேமை ஏற்பட்டது என்பது அவளுக்கே ஒரு புதிர். எந்த விதத்திலாவது கனகாம்பரத்துக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறதோ? மணம் இல்லாத மலரைப் போல அவள் வாழ்க்கையும்....
வெள்ளை ஸில்க் புடவையும் அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்துகொண்டு, கருநாகப் பிணையல் போலத் தொங்கும் கூந்தலில், அந்த இடத்தில் வைத்தால் தான் பொருத்தம் என்று சொல்லும்படி கனகாம்பரப் பூச்சரத்தைச் செருகிக்கொண்டு கையில் புத்தகத்துடன் பத்து மணிக்குச் சாரதா பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது....
"டீச்சர், டீச்சர், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு எங்க மாமா சொன்னார், டீச்சர். கறுப்பா இருக்கிற தலையிலே கனகாம்பரம், பாம்பு வாயிலே மாணிக்கம் மின்னுகிற மாதிரி சிவப்பா, அழகா....!"
தான் பார்த்திராத அந்தச் சிறுமியின் மாமாவின்மீதும் சிறுமியிடமும் கோபம் பொங்குகிறது சாரதாவுக்கு. ஆனால் அடக்கிக்கொண்டு, "ஏய் இதோ பார்; இனிமேல் இந்தமாதிரி வந்து ஒன்றும் சொல்லக்கூடாது; புரிந்ததா?" என்று புன்னகையுடன் கண்டித்தாள். தினமும் கனகாம்பரத்தைக் கூந்தலில் செருகிக்கொள்ளும்போது அந்தச் சிறுமியின் வார்த்தைகள் நினைவில் நெருடும்; சில சமயங்களில் அந்த வார்த்தைகள் இதமாக இதயத்தின் ஏதோ ஒரு பகுதியை வருடுவதுபோல, அவளுள் ஒரு கிளர்ச்சியை எழுப்பும். 'அந்தச் சிறுமியின் மாமா யாராக இருக்கும்?' என்று மனத்தைச் சில நாட்களுக்குத் தனிமையில் ஓட்டிப் பார்த்தாள். அந்த ஊருக்கு அவள் வந்து ஒன்பது மாதங்களே அப்பொழுது ஆகியிருந்தன. மனிதர்கள் இன்னும் பழக்கமாகவில்லை.
பிறகு ஒரு நாள் அந்த நிகழ்ச்சியையும் சிறுமியின் வார்த்தைகளையும் மறந்துவிட்ட நிலையில் அந்த மனிதரை எதிர்பாராத விதமாகத் தெரிந்துகொள்ள நேர்ந்தது. அப்புறம் எதிர்ப்படும் போதெல்லாம் அவர் தைரியமாகப் புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு மேலே செல்லத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவள் சட்டென்று மறுபக்கம் கழுத்தை ஒடித்துத் திருப்பிக் கொண்டு விடுவாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரைக் கண்டதும் அவள் இதழ்களிலும் குறுநகை நிழலாட ஆரம்பித்தது. ஆமாம், தினமும் தன்னைப் பார்த்து குசலம் விசாரிப்பதுபோல நடந்துகொள்ளும்போது எப்படி ஊமையைப் போல இருக்க முடியும்? அவர் தன்னைக் கடந்து சென்ற பிறகும் தன் கூந்தலின் பின்பக்கத்தில் சூட்டிThis appears to be a page from a Tamil literary magazine (likely Kalaimagal, as indicated at the top). The text describes a poignant moment of reflection for a character named Saradha, followed by a dialogue between her and a man named Sundaram.
Here is the transcription of the Tamil text:
கலைமகள் (பக்கம் 40)
யிருந்த கனகாம்பரக் கொத்தை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு நெஞ்சில் குறுகுறுக்கும்.
பூக்களைப் பறித்துக்கொண்டு சாரதா உள்ளே வந்தாள். காபியைக் கலந்தாள். ஒரு தம்ளருக்குச் சரியாக இருந்தது. அந்த வீட்டில் தயாராகும் காபியும் சாப்பாடும் ஓர் ஆணுக்குத் தேவையானவைதாமே? அந்த ஒருமையின் குனிய வெளியைத் தாண்டி இருக்கும் உலகத்தின் சுகானுபவத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை அவள் நழுவ விட்டுவிட்டாளோ?
நடு அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு காபியைக் குடிப்பதற்காகத் தம்ளரை வாயின் அருகில் கொண்டு போகும்போது அவள் பார்வை அறையின் வசதியான ஒரு மூலையில் உத்தரத்தின் இடுக்கில் இருந்த குருவிக் கூட்டின் மீது பதிந்தது. ஜோடிக் குருவிகளில் ஒன்று பறந்துவந்து கூட்டினுள்ளே கிடந்த குஞ்சுகளுக்குத் தன் அலகினால் உணவு ஊட்ட அந்தச் சின்னஞ்சிறு குஞ்சுகள் தம் சிவந்த வாயைத் திறந்தவண்ணம் மெல்லிய சப்தத்தில் இரைச்சலிட்டுக்கொண்டிருந்தன. சாரதா அந்தக் காட்சியில் லயித்தவளாக மனம் எங்கோ இழுக்க அசைவற்று உட்கார்ந்திருந்தாள். அந்த வீடே திடீரென்று நிசப்தத்தில் மூழ்கிவிட்டது போல் தோன்றியது. எல்லாமே சலனமற்றுப் போய் மங்கலாகப் பார்வையிலிருந்து நழுவிச் சென்றுகொண்டிருந்தன. குருவிக் குஞ்சுகளின் மெல்லிய கீச்சல் சப்தமும் சிறகடிக்கும் சப்தமும் மட்டுமே செவிக்குள் கேட்டுக்கொண்டிருந்தன அவளுக்கு. அவள் நெஞ்சு பொங்குகிறது. ஊமையடி பட்டது போல் உள்ளுக்குள் ஒரு தவிப்புக் கனன்று உணர்வுகளைப் பிசைகிறது. சொல்ல முடியாத வேதனை, சொல்லுக்கு அடங்காத வேதனை கொப்புளிக்கிறது. கண்களில் நீர் கரையிட, உணர்வுகளின் நிலையைப் பிரதிபலிப்பதுபோல் நடுங்குகிறது சாரதாவுக்கு. "ஹோ" என்று வாய்விட்டு அழுது தீர்த்துவிடவேண்டும் என்ற ஏக்கம் எழ, காபியைக் கீழே வைத்து விட்டு நாற்காலியின் கரங்களில் முகம் கவிழ் வெடித்துக்கொண்டு வரும் விம்மலில் முதுகு தூக்கிப்போட...
2
“போட்டோவில் இருப்பவர்கள் உங்களுடைய பெற்றோர்கள் என்று நினைக்கிறேன். என் ஊகம்...?”
“முழுக்க முழுக்கச் சரி. எப்படிச் சொன்னீர்கள்?” சாரதா பேச்சை இழுப்பதற்காக ஆச்சரியத்தை வெளிப்படுத்திப் புன்முறுவலுடன் வினவினாள்.
ஒரு நாள் தன் உள்ளத்து உணர்வுகளை உசுப்பிவிட்ட கேள்வியுடன் தன் முன்பு நின்ற சிறுமியின் மாமா பல சந்திப்புகளுக்குப் பிறகு அவளிடம் பேசவும், பிறகு ‘இப்படி இருக்கும் போது சும்மா பார்த்து விட்டுப் போகலாம்’ என்றும் வரத்தொடங்கி நட்பை வளர்த்துக் கொண்டுவிட்டார். நெருங்கிப் பார்க்கும்போது சுந்தரத்தின் வெள்ளைமனமும் நல்ல உள்ளமும் புலப்பட்டன. அவருக்கு அழகு இருந்தது; கம்பீரம் இருந்தது; பேச்சில் கலையார்வம் இருந்தது; அதனால்தானோ என்னவோ, அடிக்கடி அவர் உணர்ச்சி வசப்பட்டுப் போய்விடுவதுண்டு. புதிய இடத்தில் பல நாட்கள் தனிமைக்குப் பிறகு கிடைத்த நட்பு, வாசற்கதவைச் சுந்தரத்துக்காகத் திறந்து வைக்கும்படி செய்துவிட்டது சாரதாவை.
“இது என்ன விந்தை? உங்கள் அம்மாவை உரித்து வைத்திருக்கிறதே உங்கள் மூக்கும் கண்ணும்!” என்று சுந்தரம் சொன்னபோது அவளுக்கு ‘ஜில்’வென்றது.
“எதையும் நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள்!” என்று சாரதா சிரித்துக்கொண்டே கூறினாள்.
“ஒரு திருத்தம். எதையும் என்று சொல்லாதீர்கள். எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும்” என்று அவர் சொன்னபோது தன் உள்ளத்துச் சாளரத்தின் கதவுகளை யாரோ மெல்லத் திறக்க முயலுவது போன்ற பிரமையை அவள் அடைந்தாள்.
அடிக்கடி பேச்சுத் திசைதெரியாமல் போய்க்கொண்டிருக்கும். சாரதாவுக்குக் கண்ணாமூச்சி விளையாடுவது போலத்தான் இருந்தது. ஓர் ஆடவனின் நட்பும், சில சமயங்களில் அதனால் ஏற்படும் உரிமைகளும், பல தினுசான பேச்சுக்களும் அவளுக்குப் புதிய அனுபவங்கள். அந்தப் புதிய அனுபவத்தை முதல்முதலில் வரண்டிருந்த நெஞ்சு ஏற்றுக்கொள்ள முரணினாலும் நாளடைவில் அந்த அனுபவங்கள் அவளை எங்கேயோ இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டன. இளம் வயதில் அவள் மேல் விழுந்த குடும்பப் பளுவும், கொந்தளிக்கும் கடலில் படகு கவிழாமல் இருக்கப் போராடும் படகோட்டியைப் போல் குடும்பத்தை ஒப்பேற்றுவதற்காக அவள் பட்ட பாடும் பெண்மையின் மென்மையான நெஞ்சத்தை வைரமுடையதாக ஆக்கியிருந்தன. "சாரதா அந்தக் குடும்பத்துக்காகத் தியாகியாகி விட்டாள். அவளைப் போல நல்ல மனசோடு பொறுப்புள்ளவளாக இருக்கத் தெரிந்து கொள், பெண்ணே!" என்று எப்பொழுதோ தூரத்து உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் அந்த வீட்டுப் பெரியவரை நமஸ்கரித்து எழுந்ததும் ஆசீர்வாதம் செய்துவிட்டுத் தம் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி அவர் கூறிய சொற்களைக் கேட்டு அவள் பெருமிதம் அடைந்திருந்தாள். தான் மேற்கொண்ட தியாக வேள்வியின் பலனை எல்லாரும் அடைந்து குடும்பம் கரைசேர அவள்தானே காரணம்?
திடீரென்று தந்தைக்கு முடக்குவாதம் வந்து உத்தியோகம் போய் வீட்டுடன் முடங்கியபோது, அப்பாவும் தாய் இல்லாத மூன்று பெண்களும் கொண்ட குடும்பம் ஆட்டந்தான் கண்டுவிட்டது. அகப்பட்ட பணத்தைத் திரட்டி ஒரு தையல் யந்திரம் வாங்கிப்போட்டு வாடிக்கைகளைப் பிடித்துக் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. நிறுத்தியிருந்த படிப்புக்குப் புத்துயிர் ஊட்ட, பல்லைக் கடித்துக்கொண்டு பி.டி. படித்து முடித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த உத்தியோகம் பள்ளிக்கூடத்தில் கிடைத்த ஆசிரியைப் பதவி நிலைத்த பிறகுதான், குடும்ப மானத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. இரண்டு மூன்று என்று ‘டியூஷன்கள்’ வாய்த்தன. அந்த வீட்டில் இயங்கும் தையல் யந்திரத்தைப் போல அவளும் யந்திரமாக மாறி உழைத்தாள், தன்னை மறந்து. முதல் இரண்டாவது வருடத்தில் கௌரிக்குப் பிறகு கடைசித் தங்கை சுசீலாவுக்கும் கல்யாணம் செய்துவைக்க முடிந்தது. வீட்டில் பொறுப்புள்ள ஆண்பிள்ளை செய்யவேண்டிய காரியங்களை அவள் செய்து முடித்திருந்தாள். கௌரி புக்ககம் சென்றாள். வீட்டில் வளைய வந்துகொண்டிருந்த சுசீலாவும் திருமணமாகித் தன் கணவனுடன் வண்டி ஏறிச் சென்றதும் அவளை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் திடீரென்று சூழ்ந்துகொண்டு விட்ட சூன்யம் சங்கடத்தை உண்டாக்க, உள்ளே திரும்பியபோது கட்டிலில் அமர்ந்திருந்த அவளுடைய தந்தை எல்லோரையும் வாழ வைத்துவிட்டு அவள் மட்டும் தனிமையாக நிற்கும் கோலத்தைக் காணத் தாங்காமல் "குழந்தாய், நான் பாவி!" என்று நீர்மல்கத் துக்கத்துடன் அரற்றியபோது ஏனோ அவளுக்கும் நெஞ்சை அடைத்தது; "இந்த மாதிரி யெல்லாம் பேசக்கூடாது, அப்பா. நான் குடியும் குடித்தனமுமாக இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பேனோ, அதைவிடப் பன்மடங்கு எனக்கு இப்போது சந்தோஷமும் நிறைவுமாக இருக்கிறேன், அப்பா!" என்று அவரைத் தேற்றினாள். கடைசியில் தன் முதல் பெண்ணின் தியாகத்தினாலும் கடமையுணர்ச்சியினாலும் சுடர்ந்துகொண்டிருந்த முகத்தை மட்டுமே பார்த்துப் பெற்ற உள்ளம் பெருமிதமும் பூரிப்பும் அடைய முடிந்ததே தவிர, சாரதாவை மணக்கோலத்தில் பார்க்கக் கொடுத்து வைக்காமல் போய்ச் சேர்ந்தார் அவர்.
தந்தை இறந்ததும் தன் வாழ்வில் மற்றும் ஒரு பிடிப்புத் திடீரென்று கழன்று விட்டதை அவள் உணர்ந்தாள். தன் உழைப்பு இனிப் பொருளற்றதாகத் தோன்றியது அவளுக்கு. ஓடி ஓடி உழைத்த நாட்களின் சுறுசுறுப்பும் ஊக்கமும் இப்பொழுது குன்றிப்போய்விட்டதாகத் தோன்றியது. மண் புற்றுக்குள்ளிருந்து பல யுகங்களுக்குப் பிறகு திடீரென்று தியானம் கலைந்து எழும் ஞானியைப் போல, சாரதா தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் பார்க்கத் தொடங்கியபோது, அவளுக்கு வயசு முப்பத்திரண்டைத் தாண்டியிருந்தது.
ஏதோ ஓர் அநுபவத்தைத் தான் தாண்டி வந்துவிட்டது போன்ற உணர்ச்சியும், ‘இனி நம் வாழ்க்கைதான் என்ன?’ என்று சங்கிலித் தொடர்போல நீண்ட கேள்விகளும் அவள் சிந்தனையை மண்ணுண்ணிப் பாம்பாகக் குடைய ஆரம்பித்தன. அப்படிப்பட்ட உணர்வுகளும், அவளைச் சூழ்ந்துகொண்ட தனிமையும், ஒரே கதியில் செல்லும் சுவையற்ற நாட்களும் அவளுள் சலிப்பையும் துக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தன.
இந்த மனநிலையில் புது ஊருக்கு மாற்றலாகி, வந்த இடத்தில் சுந்தரத்தின் திடீர் நட்பு அவளுடைய இதயத்துக்கு அருமருந்தாக இருந்தது. அவளிடம் இருந்த பலவீன உணர்ச்சியே, சுந்தரத்துக்கு அதிகச் சலுகையையும் உரிமையையும் அளித்துவிட்டது என்று சொல்ல வேண்டும்.
“குடும்பத்துக்காக நீங்கள் உழைத்த உழைப்பில் உங்களைப் பற்றி நினைக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. நீங்கள் பெண் ஆயிற்றே!” என்று ஒரு நாள் சுந்தரம் கேட்டதற்கு அவள் கூறிய பதில் அவருக்குத் திருப்தியாகத்தான் இல்லை.
“நான் அப்பொழுது ஒரு பெண் என்பதையே மறந்திருந்தேன். ஓர் உத்வேகம் இருந்து என்னை உழைப்பில் மூழ்கடித்துவிட்டது. அதற்காக நான் இப்பொழுது வருந்தவில்லை. கடந்த நாட்களைக் கவனிக்கும்போது எனக்குப் பெருமிதமாகவும் இருக்கிறது. அந்தப் பெருமிதமே வாழ்க்கையில் திருப்தியாக இருக்கிறது.”
சுந்தரம் அவளைப் பார்த்துச் சிரித்தார்.
“பொய். உங்களுடைய மனத்தின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ‘குளோரோபாரம்’ கொடுத்து வைத்திருந்தீர்கள். இப்பொழுது உங்களை விட்டு எல்லோரும் சென்ற பிறகு, உங்களுடைய தியாகத்தின் பயனைப் பிறர் அநுபவித்த பிறகு உங்கள் தியானம் கலைந்திருக்க வேண்டுமே. ஏன் சொல்கிறேனென்றால் இயற்கையை அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியாதே!”
“நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? மனத்தத்துவம் அதிகம் படித்துவிட்டதாக நினைப்போ?” என்று சாரதா சிரித்தாள்.
“இல்லை. நீங்கள் அடைந்ததாகச் சொல்லும் திருப்தியை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?”
சாரதாவின் உள்ளம் சுந்தரத்தின் வார்த்தைகளில் பொதிந்திருந்த கருத்தை உன்னிப் பதைத்தது. அடிக்கடி தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிக்கு எந்த உருவம் கொடுத்து எப்படி விளக்குவது? அதுதான் எந்தகைய உணர்ச்சி? ஊமைக் கனவு கண்டது போலத் தவித்தாள் சாரதா.
சுந்தரம் அவளையே கூர்ந்து நோக்கினார்: “சாரதா, வெளிப்படையாகக் கேட்டுவிடுகிறேனே! உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனத்தில் எழவில்லையா? மனத்தை மறைக்காமல் சொல்லுங்கள்.”
சாரதா சற்றுத் திணறித்தான் போனாள். தன் வாழ்நாளை இப்படியே தனியாகக் கழித்துவிட முடியுமா என்ற கேள்விக்கு அவளுக்கே பதில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சூழ்ந்திருந்த தனிமை மட்டும் அவளைத் துன்புறுத்திக் கொண்டுதான் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு துணை கட்டாயம் வேண்டுமென்றா? முப்பத்திரண்டு வயதைத் தாண்டிவிட்ட பருவத்தில் என்ன மாற்றம் அவளுக்குக் கிடைக்க முடியும்? துணை என்பது எத்தகைய பிடிப்பு? கிணற்றடியில் பூக்கும் கனகாம்பரத்தைப் போல அழகு இருந்தும் மணமில்லாத பருவம் ஆயிற்றே அவளுடையது! தன்னால் தனிமையில் புழுங்க முடியாது என்பதற்காக, சுட்டெரிக்கும் சூனியத்திலிருந்து விடுதலை பெற அவள் திருமணம் செய்துகொண்டு ஒருவரைத் துணையாக அடைவதைத் தவிர வேறு வழி இல்லையோ?
“நான் கேட்ட கேள்விக்கு மௌனம் பதிலானால் என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது?” சுந்தரம் அவளது எண்ணப் போக்கைத் தடுத்தார்.
“ஒரு பெரிய பிரச்சினையை கிளப்பிவிட்டு நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே!” என்றாள் சாரதா.
“இல்லவே இல்லை. நீங்கள் மனம் வைத்தால் இதில் பிரச்சினைக்கு இடமே இல்லை. நான்—நான்— சொல்வது புரிகிறதா, சாரதா?” தயங்கித் தயங்கி இதைச் சுந்தரம் கூறியபோது சாரதாவுக்கு உடலெங்கும் ‘குப்’பென்று உடல் வேர்த்தது.
“உங்கள் முடிவைப் பிறகு சொல்லுங்கள்,” என்று கூறி உள்ளத்தில் அலைகளை எழுப்பிச் சென்றுவிட்டார் சுந்தரம்.
அவளுடைய மனநிலையை ஆசுவாசப்படுத்துவது போல, கௌரியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. “இந்தக் கோடை விடுமுறைக்கு ஊட்டிக்குப் போகிறேன். நீயும் வந்தால் கொஞ்ச நாள் சேர்ந்து இருக்கலாம்.” அவருக்கு எழுதச் சொன்னார்...” கடிதத்தைப் படிக்கும் போது, கௌரியின் சின்னஞ்சிறு குடும்பத்தைப் பற்றிய செய்திகளை அறியும்போது சாரதாவுக்குப் பெருமிதம் தலைதூக்கியது. அவள் அல்லவோ தண்ணீர் வார்த்து வளர்த்தவள்! ஒரு நிறைவு ஊடுருவிப் பாய்ந்து உள்ளமெங்கும் நிரம்பியது. மறுநாள் சுசீலாவிடமிருந்து கடிதம் வந்தது. “கடைசிக் குழந்தைக்கு அம்மை குத்தி ஒரு வாரம் ஆகியது. இப்பொழுது நல்ல காய்ச்சல் அடிக்கிறது. அது ‘டூரில்’ போயிருக்கிறார். எனக்குக்கூட இந்தப் குழந்தையை இரவு பகலாகக் கவனித்துக்கொள்வதில் உடம்பு சரியில்லை. தனியாக இருக்கப் பயமாக இருக்கிறது, நீ உடனே வந்தால் சௌகரியமாக இருக்கும். எனக்குக் கஷ்டம் வந்தால் நான் யாரிடம் சொல்வேன்? நீதானே எனக்கு அம்மா, அப்பா எல்லாம்? கட்டாயம் உடனே புறப்பட்டு வரவேண்டும்.”
பதறிக்கொண்டு வந்தது சாரதாவுக்கு. ‘நீதானே எனக்கு அம்மா?’ என்ற வரிகள் அவள் உள்ளத்தைப் பிசைந்தன. அந்த வார்த்தையின் கருத்து, தன் நிலை உயர்ந்துவிட்டதாக, மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பாத்திரமாகிவிட்டதாக உணர்த்தியது. தான் தனி மரம் அல்ல; இரண்டு குடும்பங்களின் சாதக பாதகங்களுடன் இணைந்தவள். அவள் பொறுப்பு உள்ளவள். சாரதா பெரியவள்; ஒரு குடும்பத்தின் தலைவி அவள். அவள் ஒரு தாய். அவளுக்குக் கௌரி என்றும். This is a transcription of the Tamil text from the image provided. It appears to be a page from a short story titled "துணை ஒன்று வேண்டும்" (Thunai Ondru Vendum).
துணை ஒன்று வேண்டும் (43)
சுசீலா என்றும் இரண்டு பெண்குழந்தைகள் உண்டு.
பெண்வீட்டுக்குச் செல்லும் தாயைப் போலச் சாரதா பரபரவென்று பிரயாணத்துக்கு ஏற்பாடுகள் செய்தாள். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழையும் போது வண்டி புறப்படத் தயாராகிவிட்டது. இரண்டாவது வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தாள். கார்டு விசில் ஊத, வண்டி கத்தி விட்டு மெதுவாக நகர ஆரம்பித்த போது தான் சாரதா படியில் காலை வைத்து ஏறிக்கொண் டிருந்தாள். சட்டென்று உள்ளேயிருந்து ஒரு கரம் அவளைப் பற்றி மேலே இழுத்தது.
"நல்ல வேளையம்மா. ஒரு நிமிஷத்தில் நெஞ்சு பேதலித்துவிட்டது. ஸ்டேஷனுக்குக் கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதோ?"
குரல் வந்த திசையை நோக்கினாள். ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒரு முதிய பெண்மணி முகம் லட்சுமிகரமாக ஒளிர்ந்து கொண்டிருக்க உட்கார்ந்துகொண் டிருந்தாள். சற்று நேரத்துக்கு முன்பு அவளைப் பிடித்து மேலே இழுத்த பையன் அவளருகே நின்று கொண்டிருந்தான். அந்தப் பிள்ளைக்குப் பதினெட்டு வயசு இருக்கும். களையான முகம்; நல்ல திடகாத்திரம்.
"உட்காரேண்டா. எதற்காக இப்படித் தவம் கிடக்கிறாய்? இவன் என் பிள்ளை!" என்று கூறினாள் அந்த மாது.
சாரதா எதிர்த்தாற்போல் அமர்ந்து கொண்டாள்.
"உன் பெயர் என்னப்பா?" என்று வினவினாள் சாரதா, அந்தப் பையனைப் பார்த்து.
"ராமு."
"உனக்குக் கஷ்டம் கொடுத்துவிட்டேனே, ரொம்பச் சிரமமாக இருந்ததோ?"
"இது சாதாரண உதவி, மாமி. உதவி செய்யும்போது கஷ்டத்தைப் பார்த்தால் முடியுமா?" என்று அந்தப் பையன் சொன்ன போது, "மாமி" என்ற பதப்பிரயோகத்தைக் கேட்டுச் சாரதா சரியாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். பெருமித உணர்வு அவளுள் இழையோடியது. 'ஆமாம், நான் பெரியவள்; ஒரு குடும்பத் தலைவி!'
திடீரென்று அந்த அம்மாள் குடல் தெறிக்க இருமினாள். ராமு பிளாஸ்க்கைத் திறந்து வெந்நீரை எடுத்துத் தன் தாயின் தலையை இதமாகப் பற்றிக்கொண்டு வாயில் மெதுவாக ஊட்டினான். பிறகு நெஞ்சை இதமாகத் தடவி விட்டான். வேர்த்திருந்த முகத்தைச் சிறு துண்டினால் துடைத்தான்.
தன் தாய்க்கு ஆதரத்துடன் பணிவிடை செய்யும் அந்தப் பிள்ளையும், அந்தப் பணிவிடைகளினால் பெருமையும் பாசமும் பெருகும் கண்களுடன் அந்தத் தாய் பிள்ளையை நோக்கும் விழிகளில் ஒளிவிடும் நிறைவும் சாரதாவைத் தனி உலகுக்கு அழைத்துச் சென்றன. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் கழித்த எட்டு மணி நேரப் பிரயாணத்தில் அந்த முதிய மாதுக்கும் பையனுக்கும் உள்ள பாசத்தின் நெருக்கத்தையும் துடிப்பையும் சாரதா பரவசத்துடன் கவனித்தாள். 'இந்தத் தாய் முந்திய ஜன்மத்தில் நிரம்பப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!' என்று எண்ணினாள். ஸ்டேஷனில் இறங்கி வீடு போய்ச் சேர்ந்த பிறகுகூட, இரவில் அந்தப் பையன் தன் தாய்க்கு உணவு ஊட்டியதும், தலையணையை இதமாக வைத்துத் தாயைப் படுக்கவைத்து போர்வைப்பைப் போர்த்திவிட்டு, நீல விளக்கைப் போட்டுவிட்டுத் தாயின் காலடியில் உட்கார்ந்திருந்ததும் சாரதாவின் கண்களில் தோன்றி மனத்தைக் குளிர வைத்துக்கொண்டிருந்தன.
சாரதாவைக் கண்டதும் சுசீலா ஓடோடி வந்து வணங்கினாள்; "அக்கா, நீ இன்றைக்குக் கட்டாயம் வந்துவிடுவாய் என்று தெரியும். நீ வந்தது எவ்வளவு தெம்பாக இருக்கிறது!" என்று கூறியபோதும், அங்கே இருந்த நாட்களில் சுசீலாவின் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டபோதும் தான் ஒரு பெரிய மனுஷியாக ஆகிவிட்டது போல அடிக்கடி ஓர் உணர்வு உள்ளோடியது. 'நீ தானே எனக்கு அம்மா எல்லாம்?' என்ற சொற்கள் நினைவில் நர்த்தனமாடின. அது ஓர் இன்ப அநுபவமாக இருந்தது.
பத்து நாட்கள் கழித்துத் திரும்பினாள். திடீர் திடீரென்று ரயிலில் சந்தித்த பையனும், அவனுடைய சேவைகளினால் "இந்த உலகத்தில் இதைவிடப் பாக்கியம் என்ன இருக்க முடியும்?" என்று ஒளி விடும் அந்த மாதின் விழிகளும், "நீதானே எனக்கு அம்மா?" என்ற சுசீலாவின் சொற்களும், சுசீலா தன் குழந்தைகளிடம் காட்டிய பரிவும் பாசமும் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்து விடும். அப்படியே அந்த மானசீகக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துப் போய்விடுவதும் உண்டு.
"உங்கள் சகோதரியின் குடும்பம் சௌக்கியந்தானே?" என்று வினவியவாறு வந்தான் சுந்தரம்.
"வாருங்கள்!" என்றாள் சாரதா.
"அன்றைக்கு நான் கேட்டதற்குப் பதில் இன்று கிடைக்குமா?" என்று சுந்தரம் கேட்டபோது, சாரதா லேசாகப் புன்னகை பூத்தாள். ஒரு கணம் நிதானித்தாள்.
"என்னை விரும்புவதற்கு நீங்கள் ஒரு காரணம் சொல்ல முடியுமா?" என்ற கேள்வி திடுமென அவளிடமிருந்து வந்தது. சுந்தரம் நிலைகுலைந்தார். சாரதா அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, வெகு நாட்களாகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த அவர் மனத்தில் அவளுடைய உருவம் அசைத்ததையும், அவர் தன்னைவிட ஒரு வயசு பெரியவள் என்று தெரிந்தும் அவளுடைய வனப்பிலும் கம்பீரத்திலும் தம் மனம் கொள்ளைபோய் விட்டதையும் தெரிவிக்கக் கூசிப்போய் மனம் தவித்தார். இன்னது செய்கிறோம் என்று தெரியாமல் திடீரென்று அவள் கரங்களைப் பற்றி, "சாரதா, உன் அழகு என்னை... என்னை...!" என்று சொல்லி மாறினார். விபத்தைப் போல எதிர்பாராத விதமாக அவளது பார்வை நிலைக் கண்ணாடியில் பதிய அங்கே பிரதிபலித்த காட்சியில் சுந்தரத்தின் கண்களுக்கு வனப்பு தோன்றும் உருவம் வயசுக்கேற்ற வளர்ச்சியையும், தோற்றத்தில் முதிர்ச்சியையும் காட்டுவதாகத் தோன்ற, அந்தக் கோலத்தில் சுந்தரத்தின் திடீர்ப்போக்குக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருப்பது பொருத்தம் இல்லாமல் இருந்தது. சே, இவ்வளவு வயசுக்குப் பிறகு இந்த நிலையில் நிற்பது அவளுக்கே கண்களை மூடிக் கொள்ளச் செய்தது. வயிற்றைப் புரட்டியது சாரதாவுக்கு. "நீதானே எனக்கு அம்மா?" என்று அவள் செவியில் சுசீலாவின் குரல் ஒலித்தது.
அவள் சட்டென்று கையை உதறிக் கொண்டு, "நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படக்கூடாது!" என்று கூறியவள் எங்கோ தன் பார்வையைச் செலுத்தினாள். நெஞ்சு அலை மோதியது.
"மன்னிக்க வேண்டும்; சாரதா!" என்று மெல்லிய குரலில் கூறியவர் அங்கு நிலவிய மௌனத்தில் எப்பொழுது மறைந்தார் என்று அவளுக்குத் தெரியாது.
'என் அழகா இவரைக் கவர்ந்தது என்றார்? அட கஷ்ட காலமே! இவர் என்ன மணந்து கொள்வதில் என்ன பிரயோசனம்? வாழ்க்கை யில் துணை என்னும் ஒரு பிடிப்பை மட்டும் வேண்டித் தவிக்கும் எனக்கு இவருடைய உறவு எந்த வகையில் திருப்திப்படுத்தும்?' என்று பலவாறாக மனம் நீர்க் கோலம் போட்டது.
3
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இன்று மனத்தின் குழப்ப நிலை உச்ச நிலையை அடைந்திருந்தது. அந்த வேதனை தாங்க முடியாமல் இருந்தது.
"எனக்கு வேண்டியதுதான் என்ன?" என்ற கேள்விக்கு அவள் விடை தெரியாமல் தவிக்கும்போதும் ரயிலில் பார்த்த பதினெட்டு வயசுப் பையனும் தாய்மையுணர்ச்சி முகமெல்லாம் பொங்க 'இவன் என் பிள்ளை' என்று கூறிய பெண்மணியின் நிறைவும் அவளை அலைக்கழிக்க ஸுட்கேஸுடன் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் சாரதா. அடிமனத்தில் நீர்க்குமிழி போல் தோன்றிய ஒரு தீர்மானமே அவளை அப்படிப் புறப்படச் செய்திருந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு கதவு திறந்திருந்ததைக் கண்ணுற்று உள்ளே பிரவேசித்த சுந்தரம் பேச்சுக் குரல் கேட்டுத் திகைத்தார். கூடத்தில் மேஜையின் மேல் நான்கு வயசில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்க அருகே நின்றவாறு அதற்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தாள் சாரதா. அறையில் அங்கும் இங்கும் விளையாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன.
செருப்புச் சத்தம் கேட்டுச் சாரதா திரும்பினாள்.
"ஏது, திடீரென்று தாயாகி விட்டீர்கள் போலிருக்கிறதே! குழந்தை யாருடையது?" என்று கேட்டார் சுந்தரம்.
"நேற்று வரையில் இது சென்னை 'தாயக'த்தில் இருந்தது. இன்றையிலிருந்து என் குழந்தை!" என்றாள் சாரதா.
"திடீரென்று இந்த யோசனை எப்படித் தோன்றியது?"
"எனக்குத் துணை ஒன்று வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா? அந்தத் துணையைச் சம்பாதித்துக் கொண்டு விட்டேன்!"
"அப்படியென்றால்...?" என்று கேட்ட சுந்தரத்தின் குரலில் கசப்பு இல்லை.
சாரதா தலைகுனிந்தாள்.
"என்னை மறந்து விடுங்கள், சுந்தரம். எனக்கு ஒரு துணை வேண்டும் என்ற நோக்கமும் உங்களுக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற எண்ணமும் இரு துருவங்களைப் போலக் கருத்தில் வேறு பட்டவை. நான் இப்பொழுது ஒரு தாய். என் சகோதரிகள்கூட அப்படித்தான் பாவிக்கிறார்கள். ஒருத்தி தாயான பிறகு எப்படி மனைவியாக முடியும்? நீங்கள் சொல்லுங்கள்!"
குழந்தையை அணைத்துக்கொண்டு சாரதா கேட்ட கேள்வி நூதனமாக இருந்தது சுந்தரத்துக்கு. ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது அசட்டுப் பிடிவாதமாக இருந்தாலும், 'இந்த வயதில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையை விட வேறு பிடிப்பு என்ன இருக்க முடியும்?' என்ற எண்ணமும் கூடவே எழுந்தாலும், சுந்தரம் தோல்வியடைந்த மனத்துடன் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வறட்டுப் புன்னகையுடன், "உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!" என்று மட்டும் கூறிச் சென்றார்.
'நீதானே எனக்கு அம்மா எல்லாம்?' என்ற வரிகள் திடுமென்று உள்ளத்தில் ஒலிக்க, சாரதா பால் வடியும் பாலகனை வாரி யெடுத்து முத்தமிடுகிறாள். அந்த இன்பம் அவளைக் கனவுலகத்தில் சஞ்சரிக்க விடுகிறது. அந்த உலகில் —
சாரதா படுக்கையில் படுத்திருக்கிறாள். அந்த நான்கு வயசுக் குழந்தைதான் எப்படி வளர்ந்து விட்டான்! "என்னம்மா, உடம்புக்கா?" என்று பதறும் மேனியைக் கண்டு இதயத்தில் மடல் மடலாக உணர்ச்சிகள் பிரி அவிழ்ந்து தேனைச் சொரிகின்றன. "ஒன்று மில்லையடா, லேசாகத் தலைவலி!" என்றதும் ஏதோ ஒரு தைலத்தை எடுத்து நெற்றியில் தடவ, அந்த ஸ்பரிசத்தின் இதத்தை அணுவணுவாக ரசிக்க, அவன் அவளுடைய பிள்ளை — போர்வையை எடுத்துப் போர்த்தி நீல விளக்கைப் போட்டுவிட்டுப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவளையே பார்க்கும் பார்வையில் அதையெல்லாம் அனுபவிக்கும் அந்த விநாடிகளின் சொர்க்க போதை…
****************************************************************************************
No comments:
Post a Comment