Sunday, March 25, 2012

பயணம் - Short Film Script 1


The below script is copyrighted to me.

My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல் 

பயணம்



FADE IN:

உள்புறம். மகள் வீடு - பகல்

ஒரு சிறிய அகல் விளக்கு தெரிகிறது. சிலர், ஆண்களும், பெண்களும் சிரிக்கும் சத்தம் கேட்கிறது.
சிறு அமைதி.

தாஸ்

(V.O)
சரி, கிளம்பலாமா?

அகல் விளக்கில் இருந்து மெதுவாகப் பின்னால் வந்து ஒரு அறை தெரிகிறது. மங்கிய டியூப்லைட் வெளிச்சத்தில் நாலைந்து பேர் தரையில் அமர்ந்து இருக்கிறார்கள். ஒரு பாட்டி மடியில் சிறுவனுடன் இருக்கிறாள். அவள் அருகே தாஸ் அமர்ந்திருக்கிறான்.எதிரே அவன் தங்கை ஜெயா. ஜெயா அருகில், தாஸின் மனைவி கையில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் . அறையில் உள்ள ஒரே நாற்காலியில் ஜெயாவின் கணவன் அமர்ந்து இருக்கிறான்.

ஜெயாவின் கணவன்

இப்போ தான் வந்தீங்க? அதுக்குள்ள கிளம்ப வேண்டாம். நைட்டு தங்கிட்டுப் போங்க.

ஜெயா

(பாட்டியைப் பார்த்து)

ஆமாம் பாட்டி. இருந்திட்டுப் போ.

பாட்டி தாஸைப் பார்க்கிறாள்.

பாட்டி

இன்னாடா சொல்ற தாசு?

தாஸ்

(ஜெயாவின் கணவனைப் பார்த்து)

இல்லங்க மாப்பிள்ளை. இப்பன்னா டிராபிக் கொஞ்சம் கம்மியா இருக்கும்.

தாஸ் எழுகிறான். அவனுடன் அவன் மனைவியும் குழந்தையைக் கையில் தூக்கியபடி எழுந்து நிற்கிறாள்.
பாட்டியும் ஜெயாவும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அவர்கள் கண்களில் ஏக்கம் தெரிகிறது.

ஜெயா

(தாஸிடம்)

இவ்வளவு நாள் கழிச்சு பாக்குறோம். அண்ணே, அம்மாவையாவது விட்டுப் போயேன்.

தாஸ்

இல்லம்மா. ரோடுல இறங்கினா உயிருக்கு உத்தரவாதமில்ல. நைட்டுக்குள்ள வீட்டுக்குப் போயிட்டா தப்பிச்சிருவோம்.

ஜெயா

(கண்களில் கண்ணீருடன்)

சரி. பாத்துப் பத்திரமாப் போயிட்டு வாங்க.

எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஜெயா போய்ப் பாட்டியின் கையைப் பிடித்துக் கொள்கிறாள்.

தாஸ்

நம்ப குமார் கல்யாணத்துக்கு வருவீங்களா? அடுத்தாப்பில அங்க தான் பாக்க முடியும்.

ஜெயா

அதுக்கு ஆறு மாசம் இருக்கே? ஒரு மாசத்துக்கு ஒரு முறையாவது வா பாட்டி.

தாஸ்

(கனிவுடன்)

ஜெயா, உனக்கே தெரியுதில்ல, அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு வர வேண்டியிருக்கு?

ஜெயா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.


வெளிப்புறம். ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை – பகல்

ஒரு வீட்டுக்குள்ளே இருந்து தாஸ், அவன் மனைவி, குழந்தை, மற்றும் பாட்டி வெளியே வருகிறார்கள்.
சாலையில் வாகனங்கள் விரைந்து செல்கின்றன. பாதி தூரத்தில் மூன்றடி உயர மீடியன் சுவர்.
தாஸ் மெதுவாக சாலையின் விளிம்பிற்கு வந்து நிற்கிறான். அவன் பின்னால் ஒட்டிக் கொண்டு அவன் மனைவி. அருகில் பாட்டி.
பின்னால் திறந்த கதவருகில் ஜெயா தெரிகிறாள்.
பெருமூச்சு விட்டவாறே தாஸ் முதல் அடி சாலையில் எடுத்து வைக்கிறான்.
“பாங்ங்ங்ங்” என்று ஹாரன் சத்தம் அலறுகிறது. தாஸ் அதிர்ந்து காலைப் பின்னால் வைக்கிறான். அவன் கால் இருந்த இடத்திற்கு வெகு அருகே ஒரு ஆட்டோ வேகமாகச் செல்கிறது.
மூவரும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். வலது பக்கம் பார்க்கிறார்கள். சாலையில் இறங்குகிறார்கள். இரண்டு அடி முன்னால் வைப்பதற்குள் வேகமாக ஒரு கார் வருகிறது. தாஸ் அப்படியே நிற்கிறான். அவன் மனைவி பின்னால் இழுக்கிறாள். பாட்டி விடுவிடுவென்று கையை விட்டு முன்னால் போகிறாள். பிறகு காரைப் பார்த்து பின்னால் ஓடி வருகிறாள்.
மூவரும் பழைய இடத்திலேயே நிற்கிறார்கள்.

பாட்டி

பயந்திட்டே நின்னா இங்கியே நிக்க வேண்டியது தான்.

கிடுகிடுவென்று சாலையில் இறங்குகிறாள். பாதி தூரம் போய் விடுகிறாள். எங்கிருந்தோ பைக் ஒன்று பறந்து வருகிறது. பாட்டி பைக்கைப் பார்த்து முன்னாலும் பின்னாலும் திணறுகிறாள்.

தாஸ்

(கத்தி)

அம்மா, திரும்ப வா

பைக்கும் பாட்டியும் கபடி விளையாட, பைக் ஒட்டுபவன் கையைக் காட்டித் திட்டி விட்டுப் போகிறான். பாட்டி திரும்ப வருகிறாள்.

பாட்டி

நீ கத்தாட்டி இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பேன்.

தாஸ்

ஒண்ணும் வேணாம். எங்க கூட வா.

திடீரென்று வாகனங்கள் எதுவும் வரவில்லை. மூவரும் சாலையில் இறங்கி நடக்கிறார்கள்.
“பாங்ங்ங்ங்” – மறுபடி அலறும் ஹாரன். இடது புறத்தில் இருந்து ஹாரன் அடித்தவாறே ஒரு ஷேர் ஆட்டோ தாண்டிச் செல்கிறது.

பாட்டி

நான் போய்க் காட்டுறேன் பாரு.

பாட்டி சாலைக்குக் குறுக்கே ஓடுகிறாள். வண்டிகள் முன்னாலும் பின்னாலும் வளைந்து செல்கின்றன.

தாஸ்

(கத்துகிறான்)


அம்மா!

அவனும் இறங்கி ஓடுகிறான். பின்னால் அவன் மனைவியும். இருவரும் பாட்டி அருகில் வரும் போது ஒரு பெரிய பஸ் வருவது தெரிகிறது. இருவரும் பாட்டியைத் தாண்டி ஓடி மீடியனை அடைகிறார்கள்.
பாட்டி நட்ட நடுவில்.

தாஸ்

(மனைவியிடம்)

அப்பிடியே விட்டுப் போயிரலாமா?

பாட்டி

(கத்துகிறாள்)

கடன்காரப் பாவி!

தாஸின் மனைவி

இருங்க, நான் போறேன்.

அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்ப ஓடுகிறாள். தாஸும் வேறு வழியில்லாமல் பின்னால் போகிறான். பாட்டி அதற்குள் திரும்பி போய் விட, மறுபடி சாலை ஓரத்தில் பழைய இடத்திலேயே மூவரும் நிற்கிறார்கள்.


FAST MOTION:

வண்டிகள் வேகமாகச் செல்கின்றன. சூரியன் இறங்கி வருகிறது. மூவரும் குறுக்கே புகுந்து மீடியனை அடைகிறார்கள். தாஸ் பாட்டியைத் தூக்கி அதன் மேல் வைக்கிறான். அவன் மனைவி குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு சிரமப்பட்டு ஏறுகிறாள். மூவரும் மீடியன் முனையில் நிற்கிறார்கள்.
மறுபுறமும் வாகனங்களின் ஓட்டம். அதைத் தாண்டி சாலையின் மறுபக்கத்தை அடைகிறார்கள்.

END FAST MOTION


அங்கே, நேர் எதிரே, ஒரு சிறிய வீடு இருக்கிறது. தாஸ் படிகளில் ஏறிப் பூட்டைத் திறக்கிறான். கதவைத் திறந்து உள்ளே போகிறான்.
உள்ளே லைட் போடுகிறான். அவன் மனைவி தொடர்கிறாள்.
பாட்டி வீட்டு வாசலில் நின்று திரும்பிப் பார்க்கிறாள். வேகமாகச் செல்லும் வண்டிகளைத் தாண்டி, சாலையின் மறுபக்கம், ஜெயா சிறு புள்ளியாகத் தெரிகிறாள்.



THE END




My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல் 



6 comments:

Preethi said...

Chithappa,

Kalakareenga... Endha story ennavo unmai thaan. Its such a hassle to cross the road nowadays.

We in OMR knows it better :)

- Preethi

Ramiah Ariya said...

Yes, OMR and ECR were the inspiration.

JR said...

It was very nice, enjoyed it.

JR said...

It was very nice. Enjoyed it a lot.

kumaragurunatha swamy nagarajan pillai vaduvambal said...

anda patti payan thana dass aparam epidi patti nu kupadran...jayavum pattingara...enaya eludarenga....
sorry 2 say if u take s as short film no 1 will c... try better

Krish said...

அருமை