Monday, April 02, 2012

An Encounter - Short Film Script - 2


The below script is copyrighted to me.


An Encounter
FADE IN:


வெளிப்புறம். சென்னையில் ஒரு தெரு – இரவுவீடுகள் நெருக்கமாக இருக்கும் ஒரு தெரு. கேமரா மேலே உள்ள கேபிள் வொயர்களைத் தொடர்ந்து போகிறது. சிக்கலாகப் பல வொயர்கள் பிரியும் இடத்தில ஒரு வொயரைத் தொடர்ந்து போகிறோம். பிறகு அதில் இருந்து விலகி ஒரு வீட்டு சன்னல் வழியாக இருண்ட ஒரு அறைக்குள் நுழைகிறோம்.உள்புறம். மணிகண்டனின் அறை – இரவு


ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் இருட்டில் ஒளிர்கிறது. அதன் முன்னால் ஒரு பழைய பிளாஸ்டிக் நாற்காலியில் மணிகண்டன் அமர்ந்திருக்கிறான். ஒரு மங்கிய டேபிள் விளக்கு கீபோர்ட் மேலே வெளிச்சம் அடிக்கிறது. மணிகண்டன் மானிட்டரை உற்றுப் பார்த்தவாறு இருக்கிறான்.
அந்தக் குப்பையான அறையின் நடுவே இரண்டு கட்டில்கள். ஒரு கட்டிலில் படுத்திருக்கும் விமல் அங்கும் இங்கும் புரள்கிறான்.
சுற்றிலும் பயங்கர அமைதி.


விமல்


(படுத்தபடியே)


மணி, லைட்ட அணைடா.


மணிகண்டன் பதில் சொல்லவில்லை. அப்படியே இருக்கிறான். கதவுக்கு வெளியே லேசாக ஏதோ உரசும் சத்தம் கேட்கிறது. அவன் கதவைத் திரும்பிப் பார்க்கிறான்.


விமல்


என்னடா கொஞ்ச நேரமா வண்டிச் சத்தமே இல்ல?


மணிகண்டன் மெதுவாக எழுந்து போய் பச்சை வண்ணம் உதிர்ந்து போன கதவருகே நிற்கிறான். உற்றுக் கேட்கிறான்.
கேமரா அவனிடமிருந்து விலகி மறுபடிக் மானிட்டரைக் காட்டுகிறது.
“படார்” என்று ஒரு சத்தம். “ஏய்” என்று யாரோ அலறுகிறார்கள். பலமாக ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம். “சொத்” என்று கனமாக எதுவோ தரையில் விழுகிறது. மறுபடி இன்னொரு குண்டு வெடிக்கிறது.
பிறகு அமைதி. போலீஸ் ரேடியோ கரகரவென்னும் சத்தம் மட்டும் கேட்கிறது.உள்புறம். சாந்தியின் வீடு – பகல்


“டக்...டக்” என்று வாசல் கதவு தட்டப்படுகிறது. சாந்தி வந்து கதவைத் திறக்கிறாள். போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாசலில் நிற்கிறார்.


போலீஸ் கான்ஸ்டபிள் - 1


மணிகண்டன் அப்பா இருக்காங்களா?


சாந்தி


(கலவரத்துடன்)


நான் அவங்கம்மா தான்... என்ன விஷயம்?


பின்னால் பெருமாள், சாந்தியின் கணவன் வந்து நிற்கிறார்.


பெருமாள்


என்ன விஷயம் சாந்தி?


போலீஸ் கான்ஸ்டபிள் – 1


சார், உங்க பையன் மணிகண்டன் பத்தித் தான்.


கேமரா அவரிடம் இருந்து விலகி அறையைச் சுற்றி வந்து சுவற்றில் மாட்டி இருக்கும் ஒரு புகைப்படத்தை நோக்கிப் போகிறது. மணிகண்டன் பட்டதாரியாக அந்தப் புகைப்படத்தில் நிற்கிறான்.


சாந்தி


(அலறுகிறாள்) (V.O)


ஐயையோ...வெளிப்புறம். சென்னை அரசு மருத்துவமனை வாசலில் - பகல்


சென்னை அரசு மருத்துவமனை பெயர்ப் பலகை தெரிகிறது. வண்டிகள் ஹாரன் சத்தம். பரபரப்பான சாலை. சற்றுத் தள்ளி சென்ட்ரல் ரெயில் நிலையம்.


உள்புறம். மார்ச்சுவரி வாசல் – பகல்


ஒரு பெயர்ப் பலகையில் Mortuary என்று எழுதி இருக்கிறது. எதிரே உள்ள பெஞ்சில் சாந்தியும் பெருமாளும் அமர்ந்திருக்கிறார்கள். சாந்தி குனிந்து அழுதபடி இருக்கிறாள். பெருமாள் சாய்ந்து உட்கார்ந்து விட்டத்தைப் பார்க்கிறார். சில ஆர்டர்லிகள் வந்து போனபடி இருக்கிறார்கள்.
அந்தப் பாதையின் ஓரத்தில், சற்று உயரத்தில் ஒரு டி.வி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அருகே இரண்டு, மூன்று அதிகாரிகள் நிற்கிறார்கள்.


உள்புறம். Press Conference – பகல்


பல டி.வி சேனல்களின் மைக்குகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.


DCP


மணிகண்டனும் விமலும் ஒரு hacking network வச்சு நடத்திகிட்டு இருந்தாங்க. சில தனியார் வங்கிகள் கிட்ட இருந்து கோடிக்கணக்குல கொள்ளை அடிச்சிருக்காங்க. தனியா, வீட்டுல இருந்து நகராம, they were doing this. Cyber crime division analyst மிஸ்டர் கிருபாகரன் தான் அவங்களப் பிடிக்க முக்கிய காரணம்.


பக்கத்தில் நிற்கும் கிருபாகரனைக் காட்டுகிறார் DCP.


DCP


(continuing)


பல நாட்களா அவங்க கம்ப்யூட்டர் ஆக்டிவிடீஸ் வாட்ச் பண்ணிட்டிருந்தோம். நாலாம் தேதி காலையில ஒரு மணிக்கு அவங்க hacking தொடங்கும் போது ஒரு போலீஸ் டீம் அவங்க அறையில வச்சு கையும் களவுமாப் பிடிச்சோம். They resisted arrest.


(beat)


சுய பாதுகாப்புக்காக சுட்டுக் கொல்ல வேண்டியதாயிடிச்சு.


(beat)


Any questions?உள்புறம். மார்ச்சுவரி வாசல் – பகல்


பாதையில் விமலின் அம்மாவும், ஆர்டர்லி ஒருவரும் நடந்து வருகிறார்கள். சாந்தி அருகில் வந்தவுடன்,


ஆர்டர்லி


இங்கயே இருங்கம்மா.


ஆர்டர்லி போய் விடுகிறார். விமலின் அம்மா சாந்திக்கு அருகில் அமர்கிறாள். டி.வியை நிமிர்ந்து பார்க்கிறாள். பிறகு சாந்தியைப் பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன.


விமலின் அம்மா


மணிகண்டன் அம்மாவா நீங்க?


சாந்தி நிமிர்ந்து பார்த்துத் தலையாட்டுகிறாள்.


விமலின் அம்மா


விமல் உங்க பையனைப் பத்தி எல்லாம் லெட்டர் போடுவான்.


சாந்தி


மணி எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போக மாட்டான். அவனப் போயி ஈவு இரக்கமில்லாம...


அவளால் மேலே பேச முடியவில்லை. போலீஸ்காரர் ஒருவர் பாதையில் நடந்து வருகிறார். இருவரும் அவர் தாண்டிப் போகும் வரையில் மௌனமாக இருக்கிறார்கள்.உள்புறம். Press Conference – பகல்


DCP


ஒரு கம்ப்யூட்டர் இருந்து இன்டர்நெட் இருந்தா இந்த மாதிரி இல்லீகல் ஆக்டிவிடீஸ் நிறைய யூஸ் பண்ணறாங்க. இனிமே உங்க வீட்டுல வாடகைக்கு இருக்கிறவங்க யாராவது கம்ப்யூட்டர் வச்சிருந்தாங்கன்னா, அது என்ன மாடல், I.S.P யாரு எல்லாம் ஒரு பார்ம்ல எழுதி பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல கொடுங்க. We have a magistrate order for this.


ரிப்போர்ட்டர் – 1


(V.O)


சார், இதுல வட மாநிலங்கள்ள இருந்து யாராவது சம்பந்தப்பட்டிருக்காங்களா?


DCP


அவங்க கம்ப்யூட்டர்ல இருந்து நிறைய evidence collect பண்ணி இருக்கோம். அத analyze செஞ்சு பாத்தாத் தான் தெரியும்.


உள்புறம். மார்ச்சுவரி வாசல் – பகல்


ஆர்டர்லி பெண் ஒருத்தி சாந்தி அருகே நின்று கொண்டிருக்கிறாள். எல்லோரும் டி.வியைப் பார்க்கிறார்கள்.


ஆர்டர்லி பெண்


நம்ப பிள்ளைங்களப் பாத்துப் பாத்து வளக்குறோம். சென்னை வந்தா எல்லாம் கெட்ட சகவாசம் வந்து கெட்டுப் போகுதுங்க.


சாந்தி


என் பையன் அப்பிடில்லாம் இல்லை. ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டான்.


பெருமாள்


போலீஸ் எதோ குளறுபடி பண்ணிட்டாங்கம்மா.


ஆர்டர்லி பெண்


நம்மளுக்கு நம்ம பசங்க தங்கம் மாதிரி. அதுங்க வெளிய போயி என்ன பண்ணுதோ யாரு கண்டது.


போலீஸ்காரர் ஒருவர் பாதையில் டி.வியைப் பார்த்தபடி நடந்து வந்து அவர்கள் பக்கம் நிற்கிறார்.


போலீஸ்காரர் – 2


படிக்க வந்தா வெறும்னு படிக்கிறதில்ல. முதல்ல குறுக்கு வழில தான் மூளை போவுது.


சாந்தியும் விமலின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.


உள்புறம். Press Conference – பகல்


ரிப்போர்ட்டர் – 2


(V.O)


அவங்களப் பிடிக்கப் போகும் போது உங்க கிட்ட என்ன evidence இருந்துது சார்?


DCP


(கிருபாகரனைப் பார்த்து)


Can you take this question?


கிருபாகரன் முன்னால் வருகிறார்.கிருபாகரன்


அவங்க கம்ப்யூட்டர் I.P address முதல்ல கண்டுபிடிச்சோம். அதுக்கு I.S.P உதவி பண்ணாங்க. அப்புறம் location trace பண்ணி அவங்க activity log எடுத்து evidence was built up.


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


சார், ரூம்ல ஒரு கம்ப்யூட்டர் தான இருந்தது?


DCP


(மைக் அருகே குனிந்து)


Yes


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


அப்போ அந்தக் கம்ப்யூட்டர் யூஸ் பண்ணினது மணிகண்டனா விமலான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?


மௌனம்.


DCP


We have evidence now that ரெண்டு பேரும் involved.


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


ஆனா shoot பண்ணும் போது உங்களுக்கு எப்பிடித் தெரியும்?


DCP


ரெண்டு பேரும் போலீச attack பண்ணாங்க. அந்த நேரத்துல சுய பாதுகாப்புத் தான் எங்களுக்கு முக்கியம்.


உள்புறம். மார்ச்சுவரி வாசல் – பகல்


பெஞ்சில் அமர்ந்திருக்கும் மூவரும் டி.வியைப் பார்க்கிறார்கள்.


விமலின் அம்மா


மணிகண்டன் ரொம்பப் படிப்பாளின்னு எழுதி இருந்தான் விமல்.


சாந்தி


ஆமாம்மா. பத்தாவதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட்.


பெருமாள்


நான் அவன ரூமு தேடும் போதே சொன்னேன். டேய், வேணாம். வரவன் சரியில்லைன்னா நமக்கும் கெட்ட பேருன்னேன்.


விமலின் அம்மா முகம் மாறுகிறது. சாந்தி மெளனமாக இருக்கிறாள்.
முதலில் வந்த ஆர்டர்லி மார்ச்சுவரி கதவைத் திறந்து கொண்டு அவர்களை நோக்கி வருகிறான்.


ஆர்டர்லி


வாங்கம்மா...பாக்கலாம்.


சாந்தியிடம் இருந்து ஒரு விம்மல் கேட்கிறது.


உள்புறம். Press Conference – பகல்


DCP வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்.


DCP


Any more questions?


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


Sir, one more. I.P address வச்சி location track பண்ணதா சொல்றீங்க இல்லையா?


கிருபாகரன் தலையாட்டுகிறார்.


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


I.P Spoofing அப்பிடின்னு ஒரு method மூலமா வேற location காட்டலாம்னு கேள்விப்பட்டிருக்கோம்.


கிருபாகரன்


(மைக் அருகே வந்து)


That is true. ஆனா நாங்க உபயோகபடுத்தின method is accurate.


ரிப்போர்ட்டர் – 3


(V.O)


எவ்வளவு சதவிகிதம் சரியாச் சொல்றீங்க?


கிருபாகரன்


எண்பது சதவிகிதம் வரை...


DCP


(குறுக்கிட்டு)


நூறு சதவிகிதம். We did find the right people.வெளிப்புறம். சென்னை அரசு மருத்துவமனை வாசலில் - பகல்


மருத்துவமனை வாசல் பரபரப்பாக இருக்கிறது. தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. ஒரு வெள்ளைத் துணி மூடிய உடலைத் தள்ளிப் போகிறார்கள்.


வெளிப்புறம். சென்னையில் ஒரு தெரு – இரவு


கேமரா கேபிள் வொயர்களைத் தொடர்ந்து போகிறது. வொயர்கள் சிக்கலாகும் இடத்தில் ஒரு பக்கம் இறங்கி பக்கவாட்டில் ஒரு இருட்டு அறைக்குள் நுழைகிறது.


உள்புறம். ஒரு இருட்டு அறை – இரவு


லாப்டாப் மானிட்டர் ஒளிர்கிறது. அதன் முன்னால் ஒருவன் இருட்டில் அமர்ந்திருக்கிறான். மானிட்டரை உற்றுப் பார்க்கிறான். மானிட்டரில் ஒரு window தெரிகிறது. அதில் “PH Bank Admin Console” என்று எழுதி இருக்கிறது. “Password” என்று மினுக்குகிறது. கீபோர்டில் தட்டும் சத்தம். “Account Details” என்று மானிட்டரில் தெரிகிறது.

ஒரு மெல்லிய சிரிப்புச் சத்தம்.THE END


5 comments:

Madee said...

Wow..nice. I can imagine the scenes as u described when i read the script. Good one..

Anonymous said...

so what are you trying to say? everything ok till the last scene. then. you showing someone or whome? what the story you would like to tell?
Really suck!....
A script must contain a head and a tail... there is head but not a tail... you know how bad that is...

Grow...

Ramiah Ariya said...

Anonymous,
The story is not a thriller, where you point to someone and say they are the criminal. The story just plants reasonable doubt about an extra-judicial death penalty. May be the characters who die in the beginning are, in fact, guilty. Or they may not be. Within the parameters of the story, the idea is to point out that:
- in the future, even cyber-crime accused, who do not kill anyone, can be killed by the encounter culture.
- if they are, there is no reasonable way to judge them guilty.
If you read this as a "whodunit" it is your problem.

Krish said...

Ram,

Your work is fantastic. Beautiful. It requires no explanation.

I feel you should have ignored the Anonymous comment.

I discovered your works reading another lovely piece உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும் in Solvanam this morning. Read ரசிகன் too.

I really happy to have found another lovely writer in Tamil.

Krish

Ramiah Ariya said...

Thank you Krish. The short stories in Solvanam were published ten years after writing them. It was a productive phase then.