Thursday, June 11, 2009
Tamil Short Story - 2
I wrote the following story recently. It continues with the husband-wife characters Raghu and Prema, first written here. Let me know if you like it.
பெண் விடுதலை வேண்டும்!
----------------------------------
இரா. இராமையா
ரகு மணி பார்த்தான். முதன் முறையாக வீட்டுக்கு அலுவலக நண்பர்கள் வருகிறார்கள். அவனுக்குப் படபடப்பாக இருந்தது.
மிகவும் சிரமப்பட்டு பார்ப்பதற்க்கு ஒரு குடும்பப் படம் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதிலும் நடுவில் ஒரு குத்து டான்ஸ் இருந்தது.
"அவங்க வந்தவுடன உள்ள கூட்டிப் போய் புடவை, நகைன்னு பேச வேண்டாம்" , என்றான் ரகு.
"நாங்க ஏதோ பேசிக்கறோம். உங்களுக்கென்ன ?" என்றாள் பிரேமா.
"கொஞ்சம் உபயோகப்படற மாதிரி எதுனா பேச மாட்டீங்களா ?" என்றான் ரகு.
பிரேமா நிதானத்துடன், "ஏன்? நீங்கள்ளாம் ரொம்ப அறிவு பூர்வமா தான் பேசுவீங்களோ?" என்றாள்.
"எவ்வளவோ சப்ஜெக்ட் இருக்கு. நாட்டு நிலைமை, சமுதாயம் இப்பிடி கேவலமா இருக்கு. எனக்கு அப்பிடிப் பேசத் தான் பிடிக்கும்."
"அதெல்லாம் பேசினா சண்டை தான் வரும்."
"வராது. உன் மரமண்டைக்குப் புரியுற மாதிரி இன்னைக்குப் பேசுறோம் பாரு."
படம் முடிந்து சிறிது நேரம் மெளனமாக இருந்தார்கள். ரகு, அர்த்தபூர்வமான வகையில் அறிவைத் தூண்டும் ஒரு விவாதத்தை தொடங்க முடிவு செய்தான்.
"அந்தப் படத்துல வர மாதிரி பெண்கள் வேலைக்கு போறது பத்தி என்ன நினைக்கறீங்க?" என்றான்.
இரு ஆண்களும் அவனை முறைத்தார்கள். மனைவிகள் தங்கள் கணவர்களை ஆவலுடன் பார்த்தார்கள்.
"வடிவேலு அடி வாங்கறதே ஒரு அழகு", என்றான் வருண்.
"எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது", என்றான் காந்தி.
"அவரு கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க", என்றாள் வருணின் மனைவி.
"என்ன கேட்டான்?"
ரகு மறுபடித் தன் கேள்வியைக் கேட்டான்.
"ஒ ..அதுவா? வந்து...நல்ல டேலன்ட் இருந்தா என்ன தப்பு?" என்றான் காந்தி.
"ஏன்...நீங்கள்ளாம் ரொம்ப டேலன்டோ ?" என்றாள் அவன் மனைவி.
"வரலாறு பூர்வமா பார்த்தா நாட்டுக்கு ஆணு , வீட்டுக்குப் பெண்ணுன்னு வைச்சான்", என்றான் காந்தி.
அவன் மனைவி விடாமல், "எவனும் வைக்கல.. வச்சவன உங்களுக்குத் தெரியுமா?" என்றாள்.
காந்தி, "வருணுக்குத் தெரியும். என்ன ஆள விடுங்க", என்றான்.
ரகு விவாதத்தைச் சற்றுப் பயனுள்ளதாக்கும் பொருட்டு, "அப்போ டேலன்ட் இருந்தா தப்பு இல்லன்ற?" என்றான்.
"டேய்..நீ என்ன பெரிய சாலமன் பாப்பையாவா? நீ சொல்லேன். வேலைக்குப் போறது தப்பா , ரைட்டா? "
ரகு இதைச் சாக்கு வைத்து அரை மணி நேரம் பேசலாம் என்று முடிவெடுத்தான்.
"ஐ.நா சபையோட ரிபோர்ட்படி பார்த்தா பெண்கள் உலகத்துல ஐம்பது சதவிகிதம். ஆனா எழுபத்தி ஐந்து சதவிகிதம் வேலை அவங்க தான் பாக்குறாங்க"
"யாரு...இவளா?" என்றான் வருண்.
"ஆமா"
"கிழிச்சா"
"ஹலோ அவரைப் பேச விடுங்க".
"டேய்.. ஐ.நா சபையெல்லாம் இதுல இழுக்காத...உங்க வீட்டுல எப்பிடி?"
"கரெக்ட்" என்றாள் பிரேமா.
ரகு அவளை முறைத்தான்.
"ஸீ ..எங்க வீடு, உங்க வீடுன்னெல்லாம் பேசக் கூடாது. ஸ்டாடிஸ்டிக்ஸ்படி பார்த்தா...."
"நீ சொல்லு பிரேமா. இவன் வீட்டுல எப்பிடி?"
"வெள்ளிக்கிழமை சாயங்காலம் வந்து லுங்கியக் கட்டி டி.வி முன்னாடி உக்கர்ந்தாருன்னா திங்கள் காலையில தான் எந்திரிப்பாரு."
எல்லோரும் ஹோ..ஹோ என்று சிரித்தார்கள்.
"அவன் நம்ம லெவலே கிடையாது. ஐ.நா சபை லெவல் அவன். " என்றான் காந்தி.
ரகு கடுகடுப்புடன், "என்னோட பாயின்ட் என்னன்னா..காந்தி சொன்ன மாதிரி டேலன்ட் உள்ள பெண்கள் வேலை பாக்கறதுல என்ன தப்பு?" என்றான்.
"ஒரு நிமிஷம்", என்றாள் காந்தியின் மனைவி.
"என்ன?"
"வேலைக்குப் போகாதவங்களுக்கு டேலன்ட் இல்லையா?"
"அதுவா? அது நான் அப்பிடி சொல்லலியே.." என்றான் ரகு.
"இல்ல நீங்கள்ளாம் டேலன்ட்டோட தான் வேலை பாக்கறீங்களா?"
ரகு பரிதாபமாக விழித்தான்.
காந்தி, "விடுறி", என்றான்.
"அவ்வளவு டேலன்ட் இருந்தா ஒரு கார் வாங்க வேண்டியது தான?"
சட்டென்று அமைதி நிலவியது. ரகு, பிரேமா உதவிக்கு வருவாள் என்று நினைத்து அவளைப் பார்த்தான். அவளோ வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது போல இருந்தாள். கிராதகி.
"இல்ல..வருண் நாட்டுக்கு ஆணுன்னு சொன்னதுக்குத் தான் நான் சொன்னேன்".
"நான் அப்பிடி சொல்லல. காந்தி தான் சொன்னான்."
காந்தி, சம்பந்தமே இல்லாமல் , "எனக்குக் கூட கிரண் பேடியை ரொம்ப பிடிக்கும்", என்று சொல்லித் தப்பிக்க முயற்சி செய்தான்.
வருணின் மனைவி, "நாங்கல்லாம் கிரண் பேடி மாதிரி இருந்தா நீங்கள்ளாம் காலி", என்றாள்.
பிரேமா, திடீரென்று "கோலங்கள் சீரியல் பார்த்தீங்களா?" என்றாள்.
ரகுவுக்கு எரிச்சல் வந்தது. அவனுடைய கருத்துக்களை அவள் ஏன் எப்போதும் தடுக்கிறாள்? இப்படிக் கோலங்கள் , அரசி என்று போய் புடவை நகையில் முடிப்பார்கள். அவன் பெண்கள் விடுதலை பற்றி ஏகப்பட்ட யோசனைகள் வைத்திருந்தான். பெண்களுக்கே அவர்கள் விடுதலை பற்றி பேச விருப்பமில்லை!
"சும்மா கிட", என்றான் பிரேமாவைப் பார்த்து.
பிறகு மற்றவர்களைப் பார்த்து, "நாம் இது வரைக்கும் பேசினதைத் தொகுத்து சொல்லவா?" என்றான்.
"வேண்டாம்", என்றார்கள் எல்லோரும் கோரஸாக.
ரகு விடாமல், "அப்ப சரி ...நான் இந்த சப்ஜெக்டோட முக்கியமான இன்னொரு கோணத்தைப் பற்றிப் பேசணும்னு நினைக்கறேன்" என்றான்.
"அப்ப கிளம்பலாமா?" என்றான் வருண், காந்தியைப் பார்த்து.
"இல்ல இருங்க. ஆண்களா நாம பெண்கள் விடுதலைக்கு என்ன செய்யலாம்?"
என்றான் ரகு.
"ஒரு பக்கக் கட்டுரை எழுதி நாளைக்குக் கொண்டு வரோம்", என்று எழுந்து நின்றான் வருண்.
ரகு பரபரப்புடன், "நம்பளால பெண்கள் அவதிப் படறாங்கன்னு உனக்குத் தோணலியா?" என்றான்.
"உன்னால நாங்க அவதிப்படரத விடவா?"
வருணின் மனைவி, "சே சே ..வருணால அவதியெல்லாம் எதுவும் கிடையாது..பாவம்", என்றாள்.
வருண், "கேட்டியாடா", என்றான்.
"அப்ப பெண்களை வேலைக்கு அனுப்ப நாம ஏன் தயாராயில்லை?" என்றான் ரகு.
வருண், "இவ்வளோ பேச்சுப் பேசறியே..நீ ஏன் ப்ரேமாவ வேலைக்கு அனுப்பல?" என்றான்.
ரகு திடுக்கிட்டு, "நாம பெர்சனலா பேசக் கூடாது", என்றான்.
"பிரேமா.. நீ சொல்லு. இவன் ஏன் உன்னை வேலைக்கு அனுப்பல", என்றான் காந்தி.
ரகு குறுக்கிட்டு, "அவ ஒரு இன்டெர்வியு போனா. அதுல தப்புத் தப்பா பதில் சொல்லியிருக்கா. அவன் எடுக்கல. அதான் நான் வேணாம்னு சொன்னேன்", என்றான்.
"நான் தப்பா ஒண்ணும் பதில் சொல்லல", என்றாள் பிரேமா.
வருணின் மனைவி, " ஒரு இண்டெர்வியுல தான எடுக்கல? தோ..இவரு பத்து இன்டெர்வியு பெயிலாகி அப்புறம் திருப்பதிக்கு மொட்டை வேண்டித் தான் இந்த வேலை கிடைச்சுது", என்றாள்.
வருண், " ஆமா. ரொம்ப அவசியம். எல்லார் கிட்டயும் சொல்லு", என்றான்.
ரகு, "அப்பிடி இல்ல...நல்லா படிச்சிட்டுப் போனு சொல்லறேன். எனக்குத் தெரிஞ்ச கம்பனில எல்லாம் போயி தப்புத் தப்பா பதில் சொன்னா எனக்குத் தானே கெட்ட பேரு," என்றான்.
வருணின் மனைவி, "அப்போ உங்க மானத்துக்காக அவளை போக விடுறதில்லையா?" என்றாள்.
ரகு குழப்பத்துடன், " நல்ல வேலையா இருந்தா நானே அனுப்பி வைப்பேன்", என்றான்.
காந்தியின் மனைவி, "முதல்ல நீங்க என்ன அனுப்புறது? எங்களுக்கே போகத் தெரியாதா? நாங்க ஏதாவது படிச்சா 'படிக்க வச்சேன்'னு சொல்லிக்கிறது. நாங்க வேலைக்குப் போனா அனுப்பி வச்சேன்றது", என்றாள்.
ரகு, "சரி..நான் அனுப்பி வக்கறேன்", என்றான்.
"மறுபடியும் அப்பிடியே சொல்லறீங்க?"
காந்தி, "கமான் ரகு. ஒரு இண்டெர்வியுல பெயிலானதுக்கு நீ இப்பிடிச் செய்யக் கூடாது. வீட்டுக்குள்ளயே ஏன் அடைச்சு வைக்கறே?" என்றான்.
ரகு எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தான்.
"பிரேமா..கோலங்கள் போடு...டைம் ஆச்சு.." என்றான்.
*************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
The story was excellent. Especially, the following lines:
"வெள்ளிக்கிழமை சாயங்காலம் வந்து லுங்கியக் கட்டி டி.வி முன்னாடி உக்கர்ந்தாருன்னா திங்கள் காலையில தான் எந்திரிப்பாரு."
"ஒரு இண்டெர்வியுல தான எடுக்கல? தோ..இவரு பத்து இன்டெர்வியு பெயிலாகி அப்புறம் திருப்பதிக்கு மொட்டை வேண்டித் தான் இந்த வேலை கிடைச்சுது"
It is always said that women aren't as funnier as men. But, women do have good humor sense.
Keep writing...
An interesting thing that I have experienced is that I have spoken to many housewives encouraging them to go to work but they, until today, keep saying "Udhyogam purusha lakshanam"
Just read both the stories.. Story 1 was really nice and expressed about Ragu's nature.. So I have to withdraw my comment posted just for Storyline 2.
But I seriously feel, men are no more hesitant to send their women to go for work. It becomes mandatory for both to work becoz of housing loans, for one reason. Many other reasons may follow.
Dhanasakthi,
To your question, the answer is yes, the discussion happens all the time.
In fact, the crux of the conversation in this story actually happened - it was a true conversation (sans the humor) about women going to work. We were at a friends' place and we had just finished watching the funny Tamil movie (V.Sekhar's) "Virulukketha Veekkam". In that movie the story was about women needing to work and the guys not allowing it out of ego.
After the movie, a friend of ours started questioning the movie's premise. He said that if we were to "give our best to our children" women should stay at home.
So, this story is based on an actual conversation.
The point is not if women should work or not - most families make that decision internally, based on convenience. But COMMENTING about women who work happens constantly. When I was in engineering school people called seats taken up by women as a "waste" because they would marry and not "contribute".
Most men and even some women in Indian society feel free to comment on the rights of women all the time - that is what this story is all about, really. That is why it is about the words men use - such as "letting" women work, as if women are beholden to men for the right to work.
Thanks for commenting. I like the first story better too.
True, I agree. Understood your point. The freedom to women is not to be given, but to come by default, without forcing them on.
Even I heard those stories of giving a seat to women would become wasted - I havent wasted atleast and so many of my friends.
Post a Comment